நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது இவ்வசனத்தில் கூறப்படும் விலக்கப்பட்ட உணவுகள் பற்றி விரிவான விளக்கத்தை இதுவரை அறிந்துகொண்டோம். இந்த உணவுகளைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் அவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது. இதுபற்றி விரிவாக அறிந்து கொள்வோம். நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? இதை உண்ணா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப்படுவது தான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர். இதை உண்ணா விட்டால் இறந்துவிடுவோம் என்ற நிலையை ஒருவர் அடைவது […]