Tamil Bayan Points

மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா?

கேள்வி-பதில்: ஜனாஸா

Last Updated on October 28, 2023 by Trichy Farook

மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா?

இல்லை. 

ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். பின்னர் இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டுமா?

பதில்: ஜனாஸா தொழுகை என்பது இறந்து விட்ட ஒரு முஸ்லிமுக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். முதலில் அடக்கம் செய்யும் போது ஜனாஸா தொழுகை தொழுது விட்டால் மீண்டும் தோண்டி அடக்கும் போது தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இறந்ததற்காகத் தான் தொழுகை நடத்தப் படுகின்றதே தவிர அடக்கம் செய்வதற்கும், ஜனாஸா தொழுகைக்கும் சம்பந்தம் இல்லை.