Tamil Bayan Points

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

கேள்வி-பதில்: ஜனாஸா

Last Updated on October 28, 2023 by Trichy Farook

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தொழலாம்.

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519 (1350)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி இறந்தவரின் குடும்பத்தினர் ஜனாஸா தொழுகை தொழுதுள்ளனர். அதுவும் இறந்தவரின் வீட்டில் வைத்து தொழுதுள்ளனர். அதில் ஒரு பெண்ணும் கலந்து கொண்டுள்ளார் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில், ஊரில் உள்ளவர்களை அழைத்து பள்ளியில் தொழுவற்கு முன்னர், வீட்டில் உள்ளவர்கள் மட்டும் முதலில் தொழலாம்.

எனவே, பெண்கள் முதலில் தனியாக வீட்டில் தொழுகை நடத்திவிட்டு. பின்னர் பள்ளிக்கு  ஜனாஸாவை கொண்டு வந்து அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாம். தவறில்லை.

 

(கவனக் குறைவால் இதற்கு மாற்றமான பதில் பழைய அப்-பில் இருந்தது, தவறுக்கு மன்னிக்கவும். தவறானதை முரண்பாடானதை கண்டால் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்)