Author: Trichy Farook

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? […]

அரசியல்வாதி, பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!

இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது. கூடிய விரைவிலேயே மக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று […]

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்! ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. […]

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்! எங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன். முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது […]

இஸ்லாமை ஏற்ற லாரன் பூத் (Lauren Booth)

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. – லாரன் பூத் (Lauren Booth) லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை […]

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது!

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது! யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின்பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது. பிரித்தானியாவில் மாத்திரம் […]

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்! பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்! தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் […]

இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ -இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்! [ நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) […]

லியோபால்ட் வைஸ் ஒரு சாகாப்தம்

முஹம்மத் அஸத், போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார். லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று […]

இஸ்லாத்தை ஏற்ற கிருஸ்தவ சகோதரர்!

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் […]

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bo… kker-ன் பரபரப்பான வாக்குமூலம் நான் நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ […]

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம் அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். […]

மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன?

மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன? மனைவி மாதவிடாய் நிலையில் இருக்கும்போது கணவன் அவளுடன் உடலுறவு கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். மாதவிடாய் ஏற்பட்டுள்ள காலத்தில் மனைவியுடன் கணவன் உறவுகொண்டுவிட்டால் இந்தப் பாவத்திற்கு பரிகாரமாக ஒரு தீனார் அல்லது அரை தீனாரை தர்மம் செய்ய வேண்டும் என்று பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது. أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ عَنْ مُقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ […]

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு பி. ஜைனுல் ஆபிதீன் திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தவறான கருத்துக்கு வளைக்க முடியாமல் அமைந்தவை முஹ்கம் ஆகும். நல்லவர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டாலும் வழிகேடர்கள் தவறாக வளைக்கும் வகையில் அமைந்தவை முதஷாபிஹ் என்பது ஒரு சாராரின் கருத்து. நம்முடைய கருத்தும் இது […]

விரலசைத்தல் ஓர் ஆய்வு

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணங்களைக் […]

நெஞ்சில் கை கட்டுதல் ஆய்வு

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் […]

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நவ்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப் போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் […]

வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பா? ஆய்வு

வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பானதா? கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக் கிழமை தோறும் கஹ்பு அத்தியாயம் ஓத வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். கியாமத் நாளில் ஒளி? யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது சாட்டப்பட்டாது. (அதாவது தஜ்ஜாலின் […]

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா? و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنْ الْمَسْجِدِ قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ […]

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா? பி. ஜைனுல் ஆபிதீன் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க […]

தாடியின் நீளம் ஓர் ஆய்வு

தாடி – ஓர் ஆய்வு தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), (புகாரி: 5892) ➚ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு […]

இரண்டாம் ஜமாஅத் ஓர் ஆய்வு

இரண்டாம் ஜமாஅத் ஓரு விளக்கம் ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்தவரான, இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்று வாதிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இது குறித்து மவ்வலி கே.எம். அப்துந்நாஸிர் ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை […]

கூட்டு துஆ மறு ஆய்வு

மறு ஆய்வு கூட்டு துஆ கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை சிலர் முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது. ஆதாரம்: 1 “ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ர-),(ஹாகிம்: […]

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? ஓர் ஆய்வு

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள அனைவரும் ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் என்று பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தர்ஹா வழிபாடு, மவ்லூத் பாடல், இறந்தவர்களிடம் நேரடியாக உதவி தேடுவது இன்னும் சமுதாயத்தில் வணக்கம் என்ற பெயரில் செய்யப்படும் இது போன்ற காரியங்களை இணைவைப்பு என்றும் இவற்றை செய்யக்கூடாது என்று கூறும் மத்ரஸாக்களும் மவ்லவிமார்களும் சுன்னத் வல்ஜமாத்தில் இருக்கிறார்கள். இந்த விசயத்தில் இவர்களும் நாமும் ஒத்த கருத்தில் இருக்கின்றோம். […]

10) குடும்பத்தினருக்கு சலுகை காட்டவில்லை

குடும்பத்தினருக்கு சலுகை காட்டவில்லை அரசியல் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் அவர்கள் எவ்வளவு தான் நேர்மையாக நடக்க முயன்றாலும் அவர்கள் தமது குடும்பப் பாசத்தின் முன்னே தோற்றுப் போய் விடுகின்றனர். தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தரும் நெருக்கடியின் காரணமாக தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக நடக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரும் தோற்று விடக்கூடிய இந்த இடத்திலும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் குடும்பப் பாசமோ, உறவினர்கள் மீது அவர்களுக்கு […]

09) அனைவருக்கு சம நீதி

அனைவருக்கு சம நீதி ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்த்திட அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா? என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். தாமும் பக்குவப்பட்டு மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்குமிக்கவனும், சாமான் யனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த அளவுகோன் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு […]

08) முரண்பாடின்மை

முரண்பாடின்மை எத்தனையோ துறைகளில் தலைமை தாங்குவோரை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கே முரண்படுவதையும் காண்கிறோம். அதிலும் ஆன்மீகவாதிகள் மற்றவர்களை விட அதிக அளவில் தமக்குத் தாமே முரண்படுவதைக் காணமுடியும். ஆசையை அறுக்கச் சொல்வார்கள். அவர்கள் தான் அறுசுவையுடனும், அதிகமாகவும் சாப்பிடுவார்கள். எளிமை, அடக்கம் பற்றிப் போதிப்பார்கள். தங்கள் கால்களில் மக்கள் விழுந்து எழுவதை விரும்புவார்கள். ஆடையில் மாத்திரம் தான் வித்தியாசம் காட்டுவார்களே தவிர மற்ற விஷயங்களில் சராசரி மனிதனின் அளவுக்குக் கூட அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள். இப்படி […]

07) ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை

ஆன்மீகத் தலமையாலும் பலனடையவில்லை ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி […]

06) புகழுக்கு ஆசைப்பட்டார்களா

புகழுக்கு ஆசைப்பட்டார்களா? எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா? எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பணம் காசுகள் விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி […]

04) உடுத்தி மகிழவில்லை

உடுத்தி மகிழவில்லை அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன. மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார். (புகாரி: 3108, 5818) ➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் […]

03) உண்டு சுகிக்கவில்லை

உண்டு சுகிக்கவில்லை மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். ‘மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை’ என்பதற்கு அவர்களின் […]

02) வரலாற்றுச் சுருக்கம்

மாமனிதர் நபிகள் நாயகம் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர். இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ (the hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (micheal harte) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ […]

01) முன்னுரை

பதிப்புரை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது […]

12) உண்மையான காரணங்கள் என்ன?

உண்மையான காரணங்கள் என்ன அப்படியானால் எந்த நோக்கத்தில் இவ்வளவு திருமணங்கள் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்குரிய வரம்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஏன் தளர்த்தப் பட வேண்டும்? என்பதை இனி காண்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சராசரி மனிதர்கலில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித் தூதர்எனப் பிரகடனப்படுத்தினார்கள். தம்மைத் தூதர் எனப் பிரகடனம் செய்தது முதல் உலக முடிவு நாள் […]

11) ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள்

ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள் இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும். நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபிய்யா பின்து ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள். இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்‌ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி […]

10) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும். உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ழா என்பதாகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் காஃபிர்களின் தலைவராகத் […]

09) ஜுவைரியா (ரலி) அவர்கள்

ஜுவைரியா (ரலி) அவர்கள் பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர். இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் […]

08) உம்மு ஸலமா (ரலி)

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும் இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர். திரும்பவும் மதீனாவுக்கு […]

06) ஸைனப் பின்த் குஸைமா (ரலி)

ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் […]

05) ஹப்ஸா (ரலி) அவர்கள்

ஹப்ஸா (ரலி) அவர்கள் ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர். அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய […]

04) ஆயிஷா (ரலி) அவர்கள்

3 ஆயிஷா (ரலி) அவர்கள் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது. ஆயிஷா […]

03) ஸவ்தா (ரலி)

2 ஸவ்தா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம். ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும் அவர்களின் மணைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். […]

02) கதீஜா (ரலி) அவர்கள்

1- கதீஜா (ரலி) அவர்கள் இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. […]

01) முன்னுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? – P.Janul Abideen ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்? ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை […]

ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி

பற்பல மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஒவ்வொருவரும் ஒரு தொழில் செய்து வருகின்றனர். அதில் மக்களை ஏய்க்கும் ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.  ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி என்று எப்படியெல்லாம் விதவிதமாக மக்களை ஏமாற்றினாலும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை.  கடந்த மாதம் சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் நடந்த இது போன்ற ஒரு கூத்தை செய்தித்தாள்களில் படித்துவிட்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. அந்த பரபரப்பான செய்தி இதோ: செல்வம் பெருக வேண்டி […]

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா?

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா (இக்கேள்வி கடாபி கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது) கேள்வி: அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்பட்டவர் கடாஃபி. பேச்சிலேயே அமெரிக்காவை மிரட்டியவரும் கூட. தற்போது கடாபியின் எதிர்ப்புப் படைகளிடம் ஒட்டு மொத்த லிபியாவும் கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும். மேலும் கடாஃபி சர்வாதிகார முறையில்தான் ஆட்சி செய்தாரா? விரிவான விளக்கம் தரவும். பதில் ? பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட […]

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும், ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார். அமெரிக்கர்களின் அப்பன் யார்?: அமெரிக்கர்களின் அப்பன் யார்? என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து […]

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் தடுக்க வழி என்ன?

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன? சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும். வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் […]

குழந்தைகளிடம் சிறப்பு ஜெபம் செய்து சாதனை!

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!! தற்போது அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிள் பதிப்பு “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்பது நாம் அனைவரும் அறிந்ததே! “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்ற இந்த வெளியீடு இங்கிலாந்தை ஆண்ட “கிங் ஜேம்ஸ்” என்ற மன்னரால்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. கிங் ஜேம்ஸ் என்ற அந்த மன்னர் ஒரு சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட […]

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!

சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில், அமெரிக்கா ஒரு கோழை நாடு. அந்நாட்டிலுள்ளவர்கள் உயிருக்குப் பயந்த கோழைகள் என்று குறிப்பிட்டார். அதை உண்மைப்படுத்தும் முகமாக, நாம் போராட்டம் நடத்திய தினத்தன்று அமெரிக்கத் தூதரகம் ஓர் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கான நூலகம் இயங்காது […]

Next Page » « Previous Page