Tamil Bayan Points

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 17, 2016 by Trichy Farook

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

எங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன்.

முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது வணக்க முறைகள் என்னை கவர்ந்தது.

எனது திருமணத்தின் பின் என் கணவருடன் பஹ்ரேன் தேசத்துக்குச் சென்று வாழ நேர்ந்தது. இதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி கூடுதலாக அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியது. முஸ்லிம் பெண்களின் வீடுகளுக்குச் சென்று முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் குர்ஆன் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்து.]

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

பூணம் என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் கவிதா இந்தியாவின் சிவ்சேனா எனும் தீவிரவாத இந்துக்களின் குடும்பத்தை சேர்ந்தவர். இப்போது அவரது பெயர் நூர் பாத்திமா.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பாதையில் அவர் சந்திக்க நேரிட்ட கொடுமைளை இவ்வாறு விபரிக்கிறார்.

இந்தியாவில் மும்பாயில் பிறந்த எனக்கு இப்போது 30 வயதாகிறது. எனினும் இஸ்லாமிய அறிவை பொறுத்த வரையில் நான் இன்னும் ஐந்து வயது குழந்தையை விட இளமையானவள்.

மும்பாயில் ஆரம்பபக் கல்வியை கற்று இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலை கழகத்துக்கு உயர் கல்வி கற்கச் சென்றேன். காம்பியூடர் கல்விகள் கற்று பல்வேறு பட்டங்களை பெற்ற நான், மறுமைக்காக எதையுமே செய்யவில்லை. இதனைப் பற்றி நான் பெரிதும் கவலைப் படுகிறேன். எனினும் சத்தியத்தின் பக்கம் என்னை வழி நடத்திய அல்லாஹ்வுக்கு எனது நன்றிக் கடனை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

நான் பிறந்து வளர்ந்த தீவிர பாரதத்தின் இந்து கலாசாரம் முஸ்லிம்களைகடுமையாக வெறுத்து ஒதுக்கியிருந்தது. இளம் பருவத்திலேயே சிலை வணக்கத்தை நான் கடுமையாக வெறுத்தேன். சிறு வயதில் ஒரு முறை வீட்டில் இருந்த சிலை ஒன்றை நான் தூக்கிக் கொண்டு போய், குளியலரையில் வைத்த காரணத்தால், எனது அம்மாவின் கோபத்துக்கும் ஆளாக நேரிட்டது. அந்த சந்தர்ப்பத்தில், தன்னயே காத்துக் கொள்ளத் தெரியாத சிலைக்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதாலும் அதன் ஆசியை நாடுவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது என்று கூறிய போது, இன்னும் அதிக வசை மாறி தான் எனக்கு கிடைத்தது.

எங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன்.

முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது வணக்க முறைகள் என்னை கவர்ந்தது.

எனது திருமணத்தின் பின் என் கணவருடன் பஹ்ரேன் தேசத்துக்குச் சென்று வாழ நேர்ந்தது. இதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி கூடுதலாக அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியது. முஸ்லிம் பெண்களின் வீடுகளுக்குச் சென்று முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் குர்ஆன் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்து.

என் வீட்டில் அறைக் கதவை மூடிக்கொண்டு முஸ்லிம்களைப் போல் தொழ முயன்றேன். ஒரு நாள் கதவை மூட மறந்து விட்ட போது அறைக்குள் வந்த எனது கணவர் நான் தொழுவதை கண்டு என்னை மிகவும் கடுமையாக கண்டித்தார். எனக்கு பெரும் பயம் ஏற்பட்டாலும் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள எனக்குள் ஏதோ மகத்தானதொருசக்தி தைரியத்தைக் கொடுத்தது.

நான் ”இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன். அதனால் இப்போது தொழுகிறேன்” என்று உரத்த குரலில் சத்தமிட்டேன். எனது குரலை கேட்டு அங்கு ஓடி வந்த எனது சகோதரியிடம் என் கணவர் நடந்ததை கூறியபோது, அவளும் ஆத்திரம் கொண்டாள்.

“எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நான் அறிவேன். நான் ஏற்றுக் கொண்ட பாதையில் தான் நடப்பேன்.” என்று உறுதியாக அறிவித்தேன்.

இதன் பின் என் கணவர் என்னை மிகக் கடுமையாக சித்தரவதை செய்யத் தொடங்கினார். அவரது கொடுமையின் காரணமாக நான் உணர்விழந்திருகிறேன்.

எனது இரு பின்ளைகளும் வீட்டில் தான் இருக்கிறார்கள்’ மூத்த மகன் 9ம் வகுப்பிலும் இளைய மகன் 8ம் வகுப்பிலும் கல்விகற்கிறார்கள். ஆனால் இச் சம்பவத்தின் பின் அவர்களை பார்க்கவும் அவர்களுடன் பேசவும் அனுமதியின்று அறைக்குள் அடைத்து வைக்கப் பட்டேன்.

ஒர் இரவு, நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தஅறையை திறந்து உள்ளே வந்த எனதுமூத்த மகன் என்னை அணைத்துக் கண்ணீர் வடித்தான். வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருப்பதாகவும் வீட்டில் ஒருவரும் இல்லை என்றும் எனக்கு அறிவித்தான்.

எனது குடும்பம் என்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதால் என்னை வீட்டை விட்டும் உடனே தப்பி ஓடும்படி இரு கண்களிலும் நீர் சொரிய கூறினான். எனது பிள்ளைகளை பிரிந்து என்னால் போக முடியாது என்று நான் கூறிய போது, வீட்டை விட்டும் போகத்தான் வேண்டும் என்று என்னை வற்புறுத்தினான்.

“அம்மா போய் விடுங்கள். அவர்கள் உங்களை கொலை செய்வார்கள்.”என்று அவன் கதறி மன்றாடிய காட்சி இன்னும் என் கண் முன்னால் தெரிகிறது.

இறுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடிவு செய்தேன். எனது மகன், “தம்பி! எழுந்திரு, அம்மா போகப் போகிறார். அம்மாவை மீண்டும் எப்போது காண்போம் என்று தெரியாது. அதனால் இப்போதே அம்மாவை பார்த்துக் கொள்.” என்று தன் தம்பியை எழுப்பினான்.

தூக்கம் கலைந்த எனது இளைய மகன்என்னை கட்டிக் கொண்டு “அம்மா எங்களை விட்டு போகிறீர்களா?” என்று கதறினான். “ஆம். கவலைப் படாதீர்கள். நாம் மீண்டும் சந்திப்போம்.” என்றுஅவனுக்கு ஆறுதல் கூறினேன்.

குளிரான இருண்ட இரவில் கண்களிலிருந்து கண்ணீர கொட்ட,வீட்டு வாசலில் நின்று என் இரு பிள்ளைகள் என்னை விடை கூறி அனுப்பினார்கள். இந்த காட்சியை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.

இச்சம்பவம் நினைவு வரும் போதெல்லாம், தமது வீடுகளையும், குடும்பங்களையும் பிரிந்து சென்ற ஆரம்ப கால முஸ்லிம்களின் நினைவு வரும். எவ்வளவு பெரிய தியாகம்!

என் உடம்பில் காயங்கள் இன்னும் ஆறவில்லை, என்னால் நடக்கவும் முடியவில்லை. மிகவும் கஷ்டத்துடன் போலிஸ் நிலையத்துக்கு நேராக சென்றேன். அங்கு ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் எனது கதையை கூறி, நான் இஸ்லாத்தில் புகவேண்டும் என்று அறிவித்த போது அவர் அன்புடன் எனக்கு ஆறுதல் கூறினார். எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறி எனக்கு அவருடைய வீட்டில் புகலிடம் கொடுத்தார்.

அடுத்த நாள் நான் போலிஸ் பாதுகாப்பில் இருப்பதை கேள்விப்பட்ட எனது கணவர் என்னை அவருடன் அனுப்புமாறு வற்புறுத்தினார்.நான் அதற்கு மறுத்து, வேண்டுமானால் எனது பணம், நகைகள், சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். இறுதியில் எனது உறுதியை மாற்ற முடியாது என அறிந்தபோது, எனது சொத்துக்கள், பணம், நகை அனைத்தையும் எழுத்து மூலம் பறித்துக்கொண்டார்.

போலிஸ் நிலையத்தின் அதிகாரி என்னை தன் சொந்த தங்கையை போல் அன்புடன் நடத்தினார். அவர் காட்டிய கருணையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அவருக்கு நன்றி கூறி, உடலெங்கும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு சிகிச்சை பெற வைத்திய நிலையத்துக்குப்சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்தேன். “உன்னை பார்க்க குடும்பத்தவர் ஒருவரும் வர மாட்டார்களா?”என்று ஒரு நாள் டாக்டர் என்னிடம் கேட்டார்.

நான் என்ன பதில் சொல்வது? நான் தான் சத்தியத்தை தேடி குடும்பத்தை விட்டு வெளியில் வந்து விட்டேனே! எனக்கு வீடு, குடும்பம் ஏதாவது தேவையா?

ஊமையாக இருந்தேன். எனக்கு இருந்த ஒரே உறவு இஸ்லாம் மாத்திரமே. அது எனது புதிய பாதையின் ஆரம்ப அடிச்சுவட்டிலேயே எனக்கு பாசத்தை காட்டியது.

ஆஸ்பத்திரியிலிருந்து நேராக இஸ்லாமிய மத்திய நிலையத்துக்குச் சென்றேன். அங்கு வயது முதிர்ந்தபெரியவரிடம் என்னுடைய சோகக் கதையை கூறினேன். ஒரு சில நிமிடங்கள் தயங்கிய அவர், “மகளே! இந்த சாரி உனக்குக் பொருத்தமான ஆடையல்ல. ஆகையால முஸ்லிம் பெண்களைப் போல் ஆடையணிந்து தலையையும் மறைத்துக் கொள்.” என்று கருணையுடன் கூறினார்.

பின்பு வுது செய்யும் முறையை கற்றுக் கொடுத்து, ஷஹாதாவையும் சொல்லிக் கொடுத்தார். இஸ்லாம், முஸ்லிம்கள் என்பன பற்றிய ஆரம்பஅறிவை கற்றுக் கொடுத்தார்.

ஷஹாதா கூறிய அச்சந்தர்ப்பத்தில் என் உள்ளத்தில் எந்த விதமான பதற்றமோ, பாரமோ தெரியவில்லை. மாறாக அனைத்துமே மிகவும் இலேசாக, தெளிவாக இருப்பதை உணர்ந்தேன். நாற்றமுள்ள சாக்கடையிலிருந்து நீங்கி சுத்தமான நீரில் நீந்தி வந்ததொரு உணர்வு என்னுள் எழுந்தது.

நான் முஸ்லிமாக மாறிய இஸ்லாமிய நிலையத்தின் பெரியவர் என்னைதன் மகளாக எற்றுக் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.சில காலத்தின் பின் என்னைஒரு முஸ்லிமுக்கு மணம் செய்து வைத்தார். எனது முதலாவது ஆசை அல்லாஹ்வின் வீட்டை தரிசிப்பதே என்று கூறிய போது, மக்காவுக்கு உம்ரா செய்யவும் ஏற்பாடு செய்தார்.

இந்த மாற்றத்தின் பின் நான்மீண்டும் இந்தியாவுக்கு திரும்பவே இல்லை. அதற்கு எந்த தேவையும் இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை.எனது முன்னைய குடும்பம் இந்தியாவில் பெரும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். அத்துடன் தீவிரவாத இந்து இயக்கங்களின் நெருங்கிய தொடர்பும் அவர்களுக்கு உண்டு. என்னை கொலை செய்வதாக அவர்கள் கங்கணம் கட்டியிருந்ததாகவும் அறிந்தேன். ஆனால் நான் இன்று ஒரு முஸ்லிம், அதனையிட்டு பெருமை அடைகிறேன். எனது வாழ்வின் எஞ்சிய நாட்களை இஸ்லாத்தின் ஒளியில் கழிப்பதே எனது ஒரே நோக்கம்.

முஸ்லிம்கள் கொடுமைக்காரர்கள், கொடுமையின் சகல எல்லை களையும்கடந்து செல்பவர்கள் என்று எனது இளவயதில் இந்தியாவில் போதித்திருந்தார்கள். ஆனால் நான் இன்று சத்தியத்தின் பக்கம்வந்த பின், அத்தகைய பொய்களை நேரடியாக கண்ட பின், இஸ்லாத்தில் எனக்குள்ள பற்று மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாத்தின் வெற்றிக்காகஒவ்வொரு தொழுகையின் பின் துஆ செய்கிறேன். அருளாலன் அல்லாஹ் எனக்கு ஆண் மக்களை கொடுக்க வேண்டும் என்று துஆ செய்கிறேன், அவர்களை சிறந்த முஜாஹித்களாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என விரும்புகிறேன். இஸ்லாத்தின் கீர்த்திக்காக அவர்களை தியாகம் செய்வேன்.

செய்தி, தமிழாக்கம்: ஜாசிம் இப்னு தஇயான்