Tamil Bayan Points

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on October 25, 2016 by Trichy Farook

சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில், அமெரிக்கா ஒரு கோழை நாடு. அந்நாட்டிலுள்ளவர்கள் உயிருக்குப் பயந்த கோழைகள் என்று குறிப்பிட்டார்.

அதை உண்மைப்படுத்தும் முகமாக, நாம் போராட்டம் நடத்திய தினத்தன்று அமெரிக்கத் தூதரகம் ஓர் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கான நூலகம் இயங்காது என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்கர்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம். அப்படி நடமாடக்கூடியவர்கள் மிகுந்த கவனத்துடன் நடமாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தங்களது பீதியையும், கலக்கத்தையும் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், அமெரிக்கர்கள் அனைவரும் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்படியும், ட்விட்டர் மற்றும் ஃபேஸ் புக் தளங்களில் அமெரிக்க தூதரகத்திற்கான பக்கங்களை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருக்கும்படியும், அவர்கள் தயாரித்து வெளியிட்டுள்ள ட்ராவல்லர் ஸ்மார்ட் ஐ ஃபோன் அப்ளிகேசன் என்ற சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டால்தான் உங்கள் உயிருக்கு கேரண்டி உண்டு என்ற ரீதியிலும் அவர்கள் செய்துள்ள அறிவிப்பை பார்க்கும் போது இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கோழைகள் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

அதுமட்டுமல்லாமல், இந்த போராட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு அமெரிக்க அடிவருடிகளும் மரண பயத்தில் தங்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ்கின்றனர் என்பதும் இவர்களை மிஞ்சிய கோழைகள் உலகத்தில் எவரும் இல்லை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.