Tamil Bayan Points

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா?

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on October 25, 2016 by Trichy Farook

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா

(இக்கேள்வி கடாபி கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது)
கேள்வி: அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்பட்டவர் கடாஃபி. பேச்சிலேயே அமெரிக்காவை மிரட்டியவரும் கூட. தற்போது கடாபியின் எதிர்ப்புப் படைகளிடம் ஒட்டு மொத்த லிபியாவும் கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும். மேலும் கடாஃபி சர்வாதிகார முறையில்தான் ஆட்சி செய்தாரா? விரிவான விளக்கம் தரவும்.

பதில்

? பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளுவது போல் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். என்கவுண்டருக்கு சட்டத்தில் இடமில்லை. அதற்கான தகுதியும் காவல் துறைக்கு இல்லை என்ற போதும் சில நேரங்களில் மக்களின் ஆதரவு கிடைப்பது போல் கடாபிக்கு எதிராக நடந்த கூட்டுப்படை என்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு லிபியாவின் மக்களே துணை நின்றனர்.

கடாபி ஒழிந்தால் போதும். ஒழிப்பவன் எவனாக இருந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு மக்கள் மனநிலை இருந்தது. இதில் இருந்து கடாபியின் நல்லாட்சியை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன பலரை கடாபி தூக்கில் போட்டார். அவருக்கு எதிராக அரசியல் கருத்து சொன்ன இக்வான் இயக்கத்தவருக்கும் மரண தண்டனை விதித்தார். கிரீன் புக் எனப்படும் கருப்பு புத்தகத்தை எழுதி அது தான் வேதம் என்ற நிலையை ஏற்படுத்தினார். இஸ்லாத்தைப் பொறுத்தவரை அவர் நவீன பிர்அவ்னாக இருந்தார். கம்யூனிசச் சாயல் கொண்ட கோட்பாட்டை இஸ்லாத்தின் பெயரால் திணித்தார். இதன் காரணமாக ஒட்டு மொத்த அரபுலகும் அவருக்கு எதிராக நின்றது. கடாபி ஒழிக்கப்பட வேண்டியர் என்றாலும் இப்போது கூட்டுப்படை என்ற எண்ணெய் கொள்ளைக் கூட்டம் அவரை விட ஆபத்தானவர்கள் என்பதை லிபிய மக்கள் உணரும் காலம் விரைவில் வரும். போர்க்குணம் மிக்க அடுத்த புரட்சியை கொள்ளைக் கூட்டம் விரைவில் சந்திக்கும்.
உணர்வு 16:7

Published on: October 23, 2011, 4:46 PM Views: 811