ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும். பதில் அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி
Author: Trichy Farook
076. ஜம்ஜம் நீர் அருந்தும் போது துஆ செய்வது சுன்னத்தா?
ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா? பதில் இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.
075. ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா?
மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா? பதில் நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (அஹ்மத்: 14707)
074. தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா?
தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா? பதில் மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ […]
073. ஸயீக்கு முன்னர் மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுதல்..?
தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா? பதில் அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை.
072. ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா?
ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா? பதில் ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.
071. ருக்னுல் யமானியை தொட்டு முத்தமிட வேண்டுமா?
“ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா? பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (புகாரி: 166, 1609) இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது. ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக […]
070. ஹஜ்ருல் அஸ்வத் முத்தமிடும் போது தக்பீர் கூற வேண்டுமா?
நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா? பதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) […]
069. ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி தக்பீருக்குப் பின் துஆ உண்டா?
ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா? பதில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள். […]
068. தவாஃப், ஸயீ பாதியில் நிறுத்தி தொடரலாமா?
தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா? பதில் எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன்: 2:286) ➚ இந்த […]
067. உபரி தவாஃபின் போது, வலது புஜம் தெரியுமாறு இஹ்ராம் ஆடை அணிய வேண்டுமா?
உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா? பதில் நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா நூல்: திர்மிதி 787,(அபூதாவூத்: 1607) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் […]
066. (ரமல்) 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா?
தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா? பதில் இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.
065. பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி தவாஃபை ஆரம்பிக்க வேண்டுமா?
தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா? பதில் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் […]
064. தவாஃபுக்கு உளூ அவசியமா?
தவாஃபுக்கு உளூ அவசியமா? பதில் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா […]
063. ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால் எங்கு குளிப்பது?
மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா? பதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ, (புகாரி: 1573) இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு […]
062. 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபிற்குமா?
தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா? பதில் அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூற்கள்: திர்மிதி 795,(அபூதாவூத்: 1618), நஸயீ 2875 தொழுவதற்குத் […]
061. ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா?
ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா? பதில் மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி: 1190) ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: […]
060. தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா?
ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா? பதில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (முஸ்லிம்: 2334, 1603) நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. […]
059. பாபு பனீ ஷைபா என்பதும், பாபுஸ்ஸலாம் என்பதும் ஒன்றா?
ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா? பதில் இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த […]
058. கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததுமா?
கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? பதில் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். (புகாரி: 1573) இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!
057. தல்பியாவை ஒருவர் சொல்லி மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா?
தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா? அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா? பதில் அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் […]
056. இஹ்ராமில் பனியன் ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா?
ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா? பதில் ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.
055. இஹ்ராம் ஆடையில் ப்ரெஸ் பட்டன் பயன்படுத்தலாமா?
ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா? பதில் பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை.
054. தாயாருக்காக ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா செய்யலாமா?
ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. பதில் பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் […]
053. ஹஜ்ஜில் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடாதா?
இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா? பதில் முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை […]
052. கடுகளவு மூக்குத்தி மற்றும் மோதிரம் இஹ்ராமின்போது அணியலாமா?
வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?) பதில் இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை […]
051. மூட்டப்பட்ட வேட்டி அணிந்து குளிக்கலாமா?
ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா? பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் […]
050. இஹ்ராமின் போது தலை, கால்களை மூடி போர்வை போர்த்தலாமா?
இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா? பதில் ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது. குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை […]
049. பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் தலைசீவுவது கூடாதா?
பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா? பதில் இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி […]
048. பெண்கள் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா?
பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா? பதில் பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) […]
047. காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா?
காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா? செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.
மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி!!!
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். குரங்கு கையில் பூமாலையைப் போல் குறைஷிகள் கையில் புனித ஆலயம் கஅபா மாட்டிக் கொண்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்ததும் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். மீறிச் சென்றால் […]
புகழ் எனும் போதை
புகழ் எனும் போதை اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ தள்ளாத வயதில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் தந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என் இறைவன் பிராத்தனையை கேட்பவன். (அல்குர்ஆன்: 14:39) அறிவை கொடுத்த அல்லாஹ்வை புகழ்ந்த தந்தையும் மகனும் وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ தாவுதுக்கும் […]
சிரிப்பு இறைவனின் பாக்கியம்
முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை உணர்வு, சிரிப்பு என்பது இறைவன் மனித குலத்திற்கு அளித்த பாக்கியங்களில் ஒன்றாகும். மனிதன் சிரிக்கத் தெரிந்த விலங்கு என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுவது உண்டு. சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது. உலக சிரிப்பு தினம் (World Laughter Day) […]
கண்ணீர் சிந்தி அழுவோம்!
முன்னுரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். சிரிப்பது மட்டுமே உடலுக்கு மனித குலத்திற்கு நல்லது என்று எண்ணி அதிகமான மக்கள் எப்போது பார்த்தாலும், சிரித்துக் கொண்டே இருப்பதை பார்க்கிறோம். சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது. உலக சிரிப்பு தினம் (World Laughter Day) முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி […]
சத்தியப் பாதையில் அழைப்புப் பணி
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் அழைப்புப்பணி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் கூறியுள்ளான். وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ […]
வாக்குமீறுதல்
வாக்குமீறுதல் آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ. நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 33) இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். أَرْبَعٌ […]
கஞ்சனும், வள்ளலும்
கஞ்சனும், வள்ளலும் مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ ، أَوْ وَفَرَتْ – عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا فَهُوَ يُوَسِّعُهَا ، وَلاَ تَتَّسِعُ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சனுக்கும், […]
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ. அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் […]
ஷைத்தானில் பெயரில் பித்தலாட்டங்கள்
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம் சமுதாயத்தில், ஷைத்தானை விரட்டும் பெயரில் ஏராளமான பித்தலாட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இன்று காண்போம்! சைத்தானால் இடஞ்சல்கள் ஏற்படும் மனிதனுக்கு சைத்தானால் சில இடஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். قَالَ أَبُو هُرَيْرَةَ ، […]
கேட்பவர் பதில் தருவாரா?
முன்னுரை பிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது. இன்று நம் சமுதாயத்தில் பல மக்கள் இறந்து போனவர், மகான் என்று கருதி அவரிடத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் அல்லாஹ்விடம் அவர் பரிந்துரை செய்வார். வாங்கித் தருவார் என்று நம்புகின்றனர். இறந்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அல்குர்ஆன் (27 : 80) உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. அல்குர்ஆன் […]
மென்மையை தேர்வு செய்த மேன்மை நபி
மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மென்மையும் பொறுமையும் فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ (முஹம்மதே!) […]
பொறாமைத் தீ
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ […]
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி […]
பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
பெருநாள் தொழுகையின் சட்டங்கள் ஷவ்வால் பிறை ஒன்றிலும் துல்ஹஜ் பிறை 10 அன்றும் இஸ்லாமியர்களின் பெருநாட்களாக நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அன்றைய தினம் சிறப்புத் தொழுகையை இரண்டு ரக்அத்கள் நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் சூரியன் உதித்த பின்னர் இத்தொழுகைகள் நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. 956- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : […]
நல்லிணக்கம் ஏற்படுத்துதல்
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ நம்பிக்கை கொண்டோரில் […]
உண்மையை உணர மறுக்கும் உலகம்
உண்மையை உணர மறுக்கும் உலகம் وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا (54) மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54) رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً (2) فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ (3) இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன. ( […]
பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!
பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், […]
மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை
மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார். கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, […]
சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்
சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான […]