Tamil Bayan Points

068. தவாஃப், ஸயீ பாதியில் நிறுத்தி தொடரலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா?

பதில்

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.

உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான்.

தவாஃப், ஸஃயீ – க்கு உளு கட்டாயம் இல்லை.