Tamil Bayan Points

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்யலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on April 5, 2017 by Trichy Farook

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், ஏமாற்றலாமா?

ஒரு நாட்டில் அரசாங்கத்தின் கீழ் வாழும் நாமும் அவர்களும் மறைமுகமாக ஒரு ஒப்பந்தம் செய்கிறோம். மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தரவேண்டும். நான் அரசுக்கு வரி செலுத்துகிறேன் என்ற அடிப்படையில் மறைமுகமாக ஒரு ஒப்பந்தம் செய்கிறோம். எனவே, அரசுக்கு வரி செலுத்துவது தான் முறையானது. உடன்படிக்கையை, ஒப்பந்தங்களை நிறைவேற்றவது குறித்து குர்ஆன் கூறுகிறது.

اِلَّا الَّذِيْنَ عَاهَدتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ثُمَّ لَمْ يَنْقُصُوْكُمْ شَيْـًٔـا وَّلَمْ يُظَاهِرُوْا عَلَيْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَيْهِمْ عَهْدَهُمْ اِلٰى مُدَّتِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏

இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக் குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்.

(குர்ஆன் 9:4)

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏

தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

(குர்ஆன் 23:8)

எனினும், நம்மிடம் வரியை பெற்றுக்கொண்டு நமக்கு நன்மை செய்யாமல், அரசியல்வாதிகள் தங்களுடைய சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்துவார்களானால், சிலை வைப்பதற்காக பல்லாயிரம் கோடிகளை செலவழித்தால், இது போன்று ஊதாரித்தனம் செய்து நம்மை ஏமாற்றுவார்களானால். நாமும் அவர்களை ஏமாற்றலாம். இதனால், இறைவனிடத்தில் எந்த குற்றமும் இல்லை. 

8:58 وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ

8:58. ஒரு சமுதாயத்தவர் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக! மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

இறைவனிடத்தில் எந்த குற்றமும் இல்லை என்றாலும், அரசிற்கு பதில் கூறவேண்டிய நிலை உள்ளது. உலக ரீதியாக வரும் பிரச்சனைகளை நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்.

By Farook