Tamil Bayan Points

067. உபரி தவாஃபின் போது, வலது புஜம் தெரியுமாறு இஹ்ராம் ஆடை அணிய வேண்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா?

பதில்

நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா

நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(அபூதாவூத் 1708)

ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.