
நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களில் அதிகமானோர் சொகுசு சாமியார்கள். நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் நாடே பிரளயத்தில் சிக்கினாலும் அதுபற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாதவர்கள் இந்த சொகுசு சாமியார்கள். அந்த வகை கார்ப்பரேட் சாமியார்களில் பலர் பலவகையில் சர்ச்சையில் சிக்குவார்கள். பணமோசடி மற்றும் பாலியல் சர்ச்சைகளில் இந்த சொகுசு சாமியார்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டாலும் அதை மறைக்க ஏதாவது ஒன்றைச் செய்து மக்களை திசை மாற்றி விடும் வேலையைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். […]