Tamil Bayan Points

2. முஅன்அன் المعنعن

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on April 6, 2020 by

2. முஅன்அன் المعنعن

அன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும்.

அன் அபீஹுரைரா (அபூஹுரைரா வழியாக)

அன் ஆயிஷா (ஆயிஷா வழியாக)

என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.

 நமக்குச் சொன்னார்;

 நமக்கு அறிவித்தார்;

எனக்குச் சொன்னார்;

என்னிடம் சொன்னார்;

நம்மிடம் தெரிவித்தார்;

நான் காதால் அவரிடம் செவியுற்றேன்

என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக அவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால் இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் அதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ, மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

அது போல் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பாளர் தொடரைக் கூறும் போது இடையிடையே அறிவிப்பாளர் விடக் கூடியவராக இருந்தால், ஒரு அறிவிப்பாளருக்கும் அவருக்கு அடுத்த அறிவிப்பாளரும் சமகாலத்தவராக இல்லாமலிருக்கும் போது அன் என்று பயன்படுத்தி அறிவித்தால் அதுவும் தள்ளுபடி செய்யபப்டும்.