குரோஷியாவில் பாடும் கடல் உறுப்பு (Sea Organ) எப்படி வேலை செய்கிறது?

அறிவியல் உண்மைகள்

குரோஷியாவில் உள்ள சேடார் (Zadar) நகரில், கடலின் மீது ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கடல் உறுப்பு’ (Sea Organ) என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் இதை ‘மோர்ஸ்கே ஓர்குல்ஜே’ (Morske Orgulje) என்று கூறுகிறார்கள்.

இந்தக் கடல் உறுப்பை குரோஷிய கட்டிடக்கலை நிபுணர் நிகோலா பேசிக் (Nikola Bašić) உருவாக்கினார். இது சேடார் நகரின் ஒரு பெரிய நீர்முனை சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த மேடை பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், நீருக்கடியில் குழாய்களும், நீர் செல்லும் வழிகளும் உள்ளன. இந்தக் கட்டமைப்பு ஏட்ரியாட்டிக் (Adriatic) கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகளில் பொருத்தப்பட்டுள்ளது.

வெவ்வேறு நீளம் மற்றும் அளவுகளில் உள்ள பாலி எத்திலீன் (polyethylene) குழாய்கள் சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்தப் படிக்கட்டுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. கடலலைகள் இந்தக் குழாய்களுக்குள் வந்து போகும்போது, ஒரு சிம்பொனி (symphony) இசை தானாகவே உருவாகிறது.

ஒவ்வொரு முறை அலை அடித்து வெளியேறும்போதும் ஒவ்வொரு விதமான இசை உருவாகிறது. கடலலையும் காற்றும் சேர்ந்து விசில் சத்தம், பறவை சத்தம் எனப் பலவிதமான ஒலிகளை எழுப்புகின்றன.

கடலலை அதிகமாக இருக்கும்போது சத்தம் அதிகமாகவும், அலை குறைவாக இருக்கும்போது மெல்லிய விசில் போலவும் ஒலிக்கிறது. ஒரு இசைக்கருவியில் இருந்து இசை ஒலிப்பது போலவே இது இருப்பதால், இதை ‘கடல் உறுப்பு’ என்று அழைக்கிறார்கள்.

இந்தக் கடலலைகள் எழுப்பும் இசை மனதை அமைதிப்படுத்துகிறது. இயற்கையும் அறிவியலும் இணைந்து இந்த அற்புதத்தை உருவாக்கியுள்ளன.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான வடிவமைப்புகளை வைத்துள்ளான் என்பதை இந்தக் கடல் உறுப்பு நமக்குக் காட்டுகிறது. இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் அவனது வல்லமையையும் ஞானத்தையும் நாம் உணரலாம்.

ஆதாரம்: விகடன்