மனித உடல் உறுப்புகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்கின்றனவா?

அறிவியல் உண்மைகள்

மனித உடலில் உள்ள உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிற்றில் பசி ஏற்படும்போது, ஒரு குறிப்பிட்ட மரபணு (gene) வழியாக மூளைக்குத் தூண்டுதல் அனுப்பப்படுகிறது. உணவு எடுத்துக்கொள்ளும்படி மூளை அறிவுறுத்துகிறது. மூளையின் இந்தத் தூண்டுதலால் வயிறு நிரம்புகிறது. இதன்மூலம் மூளையும் வயிறும் மரபணுக்கள் வழியாகப் பேசிக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

மனித உடலில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. ஒவ்வொரு உறுப்பின் தேவைகளையும் அறிந்து அவை தங்கள் பணிகளைச் செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் தேவையான சக்தியைப் பெற்று மனித இயக்கத்திற்கு உதவுகின்றன.

ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தேவையான சமிக்ஞைகளை அனுப்பும் பொறுப்பு புரதங்களுக்கு (proteins) உண்டு. இந்த புரதங்கள் மூலம் உடல் உறுப்புகள் தங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. மனித செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெற்ற மரபணுக்கள் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பாலமாகச் செயல்பட்டு முக்கிய தகவல் பரிமாற்றங்களைச் செய்கின்றன.

இந்த வேலை மனித உடல் முழுவதற்கும் மரபணுக்கள் திசுக்கள் (tissues) வழியாகச் செய்வதால், மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கிறது. தகவல் பரிமாற்றத்திற்கு மனித உடலில் உள்ள மூலக்கூறு கட்டமைப்புகளும் (molecular structures) உதவுகின்றன. மனித உடலின் உள்ளுறுப்புகளில் இந்தத் தகவல் தொடர்பு அமைப்பு சிறப்பாகச் செயல்படுகிறது.

மேலும், தட்பவெப்பம் மற்றும் மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் உருவாக்கம் போன்ற பணிகளையும் இந்த மூலக்கூறு கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் ஏற்றவாறு செய்துவருகின்றன. இதன்மூலமே மனித உடல் முழுமையும் நலமாகவும் வளமாகவும் இருக்கிறது.

மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இதற்காகவே ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தங்களுக்குள்ளே சமிக்ஞைகள் வழியாகப் பேசி, நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.

இறைவன் மனித உடலை எவ்வளவு நுட்பமாகவும், ஒருங்கிணைந்ததாகவும் படைத்துள்ளான் என்பதை இந்தத் தகவல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு உறுப்பும் மற்றவற்றுடன் இணைந்து செயல்படும் இந்த ஒழுங்கு, இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

ஆதாரம்: மாலைமலர்