12) உம்மு ஹபீபா (ரலி)
வயது 36
விதவைப் பெண்மணி
திருமணத்தின் போது நபியின் வயது 59
நபியுடன் வாழ்ந்த காலம் 4 வருடம்
நபிகள் நாயகத்தின் ஆரம்ப கால மக்கா வாழ்க்கையில் அங்கிருந்த எதிரிகளின் தலைவர்களில் ஒருவர் அபூசுஃப்யான் ஆவார். அவரது மகள்தான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்.
இவரது தந்தை அபூசுஃப்யான் இஸ்லாத்திற்கு எதிராக இருந்தபோதுதான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இஸ்லாத்தை ஏற்றபின் அபீஸீனியாவுக்கு நாடுதுறந்து சென்றார்கள்.
இவரது கணவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிறித்தவராக மதம் மாறினார். எனவே கணவரைப் பிரிந்து, அபீசீனியாவில் நிற்கதியாக நின்ற உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத்தான் நபிகள் நாயகம் அவர்கள் திருமணம் செய்தார்கள்.