11) சுலைமான் (அலை)
அரசாட்சி கொடுக்கப்பட்டு, காற்றையும் ஜின்னையும் கட்டுப்படுத்திக் கொடுத்து, பறவைகளிடம் பேசும் ஆற்றலையும் கொடுக்கப்பட்ட சுலைமான் ந அவர்கள் மறைவான விசயத்தை அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்க்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம்.
அவர் பறவைகளை பரிசீலனை செய்து நான் (இங்கே) ஹாத்ஹாத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லதும்றைந்தவற்றில் ஆகிவிட்டதோ என்று கூறினார்.
நான் நிச்சயமாக ஆதைக் கடுமையான வேதனை செய்வேன்.அல்லது அத்ன்ை நிச்சயமாக அறுத்துவிடுவேன் அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்” (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹ”த்ஹத் வந்து) தாங்கள் அறியாத (ஒரு) விசயத்தை நான் அறிந்து (வந்து) ஸ்ளேன். .
‘ஸபா” (நாட்டிலிருந்து உறுதியான செய்தியை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியது) நிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன், இன்னும் அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட் டுள்ளது.
மகத்தான அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்வதை நான் கண்டேன். அவர் களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாக காண்பித்து அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். அகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸஜ்தா செய்து வணங்கவேண்டாமா?! அல்லாஹ் அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் இல்லை. (அவன்) மகத்தான அர்ஷாக்குரிய இறைவன் (என்று ஹ”த் ஹ”த்) கூறியது. (அதற்கு சுலைமன் (அலை) அவர்கள்), நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம் என்று கூறினார். (அல்குர் ஆன் 27:20-27)
இவ்வசனத்தில் சுலைமான் (அலை) அவிர்கள், பறவை களை பரிசீலனை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மறைவான விசயங்களை தெரிந்திருந்தால் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. பரிசீலனை செய்யாம லேயே எவை இருக்கின்றது இல்லாதது எது என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும். பரிசீலனை செய்ததே சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியவில்லை என்பதற்கு போதுமான சான்றாகும்.
மேலும் ஹாத்ஹாத் என்ற பறவை தனக்கு தெரியாமல் சென்றால்தான் கோபமடைந்து கொன்றுவிடுவேன் அல்லது கடுமைhான வேதனை செய்வேன். அல்லது, சரியான காரணம் கூறவேண்டும் என்கிறார்கள். அடுத்து அந்த பறவை சுலைமான் (அலை) அவர்களை நோக்கி உங்களுக்கு தெரியாத விசயத்தை நான் அறிந்து வந்து உள்ளேன் எனக் கூறுகிறது. இதுவும் சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.
ஸபா நாட்டில் தன்னைப் போன்று ஒரு பெண் ஆட்டி புரிந்து வருகிறான் என்பதையும், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து சூரியனை வணங்குவதையும் ஹாத் ஹத் பறவை சொல்லும் வரை சுலைமான் (அலை) அவர்களுக்கு தெரிய” லில்லை. அதனால்தான் இவ்விசயத்தை அப்பறவை சொன்னவுடன் நீ சொல்வது உண்மையா? பொய்யா என்பதை விசாரிப்போம் என்கிறார்கள். தெரிந்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். இந்த விசயம்தான் எனக்குத் தெரியுமே என்றுதான் கூறியிருப்பார்கள். எனவே இவ்வசனம் மிகத் தெளிவாகவே நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரியாது என அறிவிக்கிறது.