வெளியூரில் இருந்தபோது தாய் இறந்துவிட்டார் — ஸஅத் (ரலி) கேட்ட ஒரு கேள்வி

ஹதீஸ் சம்பவங்கள்

“அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?”

أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பயனளிக்கும்)’ என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), ‘நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் – (புகாரி: 2756)

“ஆம்” எனும் ஒற்றைப் பதில் கேட்டதும், தம் தோட்டத்தையே அவர்கள் தாய் சார்பாகத் தர்மம் செய்தார்கள். துக்கத்தை செயலாக மாற்றியவர்கள்.

இறந்தவருக்காக நாம் செய்யக்கூடியது இன்னும் மீதம் இருக்கிறது. அழுகையோடு நின்றுவிட வேண்டியதில்லை.