வானில் பறந்த முதல் பறவை எது?
பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், பூமியில் தோன்றிய உயிரினங்களில் இறக்கை முளைத்து வானில் பறந்த முதல் பறவை எது என்று பலர் கேட்கிறார்கள்.
பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் முதலில் தோன்றியது பறவை அல்ல. டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையே தோன்றியதாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx) எனும் உயிரினம் கருதப்படுகிறது.
இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது தெரோபோட் (Theropod) எனப்படும் ஒருவகை டைனோசரில் இருந்து உருவானது.
இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வனவற்றின் பண்புகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கொண்டிருந்தது. அதாவது, இதன் அலகில் பற்கள் இருந்தன, கால்களில் செதில்கள் இருந்தன, மேலும் நீண்ட வால் ஒன்றையும் கொண்டிருந்தது.
இது இன்றைய நவீனப் பறவைகளைப் போல் பறந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், குறுகிய உயரத்தில் மரத்துக்கு மரம் பறந்திருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான மாற்றங்களையும், படிப்படியான வளர்ச்சியையும் அமைத்திருக்கிறான் என்பதை இந்த உயிரினத்தின் தோற்றம் நமக்குக் காட்டுகிறது. அவனது ஆற்றலும் ஞானமும் அளப்பரியது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை