மற்ற துணைவியரிடம் அனுமதி கேட்ட நபி (ஸல்) — நோயின் கடைசி நாட்கள்

ஹதீஸ் சம்பவங்கள்

இரு மனிதர்களுக்கு நடுவே கால்கள் தரையில் இழுபட நடந்து வந்தார்கள்

«لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ العَبَّاسِ وَبَيْنَ رَجُلٍ آخَرَ»، فَقَالَ عُبَيْدُ اللَّهِ: فَذَكَرْتُ لِابْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي: وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ؟ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவிமார்களிடம் கேட்டார்கள், அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் அவர்கள் தாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் – (புகாரி: 2588)

உரிமை இருந்தும் கேட்டுப் பெற்றார்கள். நோயின் உச்சத்திலும் மற்றவர்களின் உரிமையை மிதிக்காதவரே உண்மையான தலைவர்.

நடக்கக்கூட முடியாத நிலையிலும் அந்த வீட்டுக்கு நடந்தே சென்றார்கள். சலுகை கேட்காத ஒரு வாழ்க்கை எப்படி முடிகிறது என்பதை இது காட்டுகிறது.