மரணப் படுக்கையில் ஆட்சியாளரிடம் மஅகில் (ரலி) சொன்ன எச்சரிக்கை — முன்பே சொல்லாதது ஏன்?
“குடிமக்களை ஏமாற்றி இறந்தால் சொர்க்கம் தடை” என்றார்கள் நபி (ஸல்)
عَادَ عُبَيْدُ اللهِ بْنُ زِيَادٍ مَعْقِلَ بْنَ يَسَارٍ الْمُزَنِيَّ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ مَعْقِلٌ: إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَوْ عَلِمْتُ أَنَّ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»
– وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، قَالَ: دَخَلَ ابْنُ زِيَادٍ عَلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ وَهُوَ وَجِعٌ بِمِثْلِ حَدِيثِ أَبِي الْأَشْهَبِ، وَزَادَ قَالَ: أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ؟ قَالَ: مَا حَدَّثْتُكَ، أَوْ لَمْ أَكُنْ لِأُحَدِّثَكَ
ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்) மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களை(ச் சந்தித்து) உடல்நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியாளர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (ஹதீஸ்) செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் சில நாட்கள் உயிர் வாழ்வேன் என அறிந்திருந்தால் அதை உமக்கு அறிவிக்கமாட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். – மேற்கண்ட ஹதீஸ் ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் உடல் நலிவுற்றிருந்தபோது (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) இப்னு ஸியாத் சென்றார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும், இப்னு ஸியாத் “இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?”
அறிவிப்பவர்: ஹசன் அல்பஸரீ (ரஹ்)
நூல் – (முஸ்லிம்: 3734) ➚
உயிருக்கு அச்சப்பட்டு உயிருடன் இருக்கும்வரை இந்த ஹதீஸை மஅகில் (ரலி) அவர்கள் அந்த ஆட்சியாளரிடம் சொல்லாமல் வைத்திருந்து, மரணம் நெருங்கியபோதுதான் அச்சமின்றி அதைச் சொன்னார்கள். உண்மையைச் சொல்ல வேண்டிய தருணங்களில் நாம் அஞ்சி பின்வாங்குகிறோமா என்பதை இந்தச் சம்பவம் நம்மை நிதானித்துப் பார்க்க வைக்கிறது.
குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றவர் மட்டுமல்ல, குடும்பம், பணியிடம் என எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை ஏமாற்றுவது இறைவனிடம் பெரும் விசாரணைக்குரியது என்பதே இதன் செய்தி. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் நேர்மையாக நிறைவேற்றுவோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.