நோய்வாய்ப்பட்ட கப்பாப் (ரலி)யிடம் நலம் விசாரிக்கச் சென்றபோது கேட்டது
“முன்சென்று விட்ட எம் தோழர்கள் இவ்வுலகம் பாதிக்காத நிலையில் மறைந்துவிட்டார்கள்; நாங்களோ மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்குப் பெற்றுள்ளோம்”
دَخَلْنَا عَلَى خَبَّابٍ، نَعُودُهُ، وَقَدْ اكْتَوَى سَبْعَ كَيَّاتٍ، فَقَالَ: «إِنَّ أَصْحَابَنَا الَّذِينَ سَلَفُوا مَضَوْا وَلَمْ تَنْقُصْهُمُ الدُّنْيَا، وَإِنَّا أَصَبْنَا مَا لاَ نَجِدُ لَهُ مَوْضِعًا إِلَّا التُّرَابَ، وَلَوْلاَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ» ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى، وَهُوَ يَبْنِي حَائِطًا لَهُ، فَقَالَ: «إِنَّ المُسْلِمَ لَيُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ يُنْفِقُهُ، إِلَّا فِي شَيْءٍ يَجْعَلُهُ فِي هَذَا التُّرَابِ»
கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) கூறினார்: நாங்கள் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள: முன்சென்று விட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தம் (வீட்டுச்) சுவரைக் கட்டிக்கொண்டிருந்த அவர்கள் ‘ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்)
நூல் – (புகாரி: 5672) ➚
கடும் வலியால் அவதிப்பட்டும், மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்காமல் கப்பாப் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டது, நபி (ஸல்) அவர்களின் வார்த்தையை மதித்ததால் மட்டுமே. பொறுமை என்பது வலியை உணராமல் இருப்பதல்ல, வலியிலும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பதே என்பதை இது நமக்குக் காட்டுகிறது.
தேவைக்கு மேல் வீடு கட்டுவதில் செலவிடும் ஒவ்வொரு பணத்துக்கும் கூலி கிடையாது என்ற கப்பாப் (ரலி) அவர்களின் எச்சரிக்கை, முன்சென்றவர்களைவிட வசதியாக வாழும் நம் காலத்திற்கே அதிகம் பொருந்துகிறது. வசதி கூடக் கூட, மறுமைக்கான நமது தயார்நிலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.