தங்கமோதிரத்தை மிம்பரிலிருந்தே எறிந்த நபி (ஸல்) — மக்களும் தங்கள் மோதிரங்களை எறிந்தது
“அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்”
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَصَنَعَ النَّاسُ، ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ: «إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ، وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ»، فَرَمَى بِهِ، ثُمَّ قَالَ: «وَاللهِ، لَا أَلْبَسُهُ أَبَدًا»، فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ ” وَلَفْظُ الْحَدِيثِ لِيَحْيَى
– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، ح وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وحَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ فِي خَاتَمِ الذَّهَبِ، وَزَادَ فِي حَدِيثِ عُقْبَةَ بْنِ خَالِدٍ، وَجَعَلَهُ فِي يَدِهِ الْيُمْنَى
– وحَدَّثَنِيهِ أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيِّبِيُّ، حَدَّثَنَا أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ، ح وحَدَّثَنَا هَارُونُ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، كُلُّهُمْ عَنْ أُسَامَةَ، جَمَاعَتُهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاتَمِ الذَّهَبِ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கமோதிரம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார்கள். அதை அணியும்போது அதன் குமிழ் பகுதி தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைச் செய்துகொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, “நான் இந்த மோதிரத்தை அதன் குமிழ் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தே அணிந்துகொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.
பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை (கழற்றி) எறிந்தனர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4244) ➚
தவறு என்று உணர்ந்தவுடன், அதை நியாயப்படுத்தாமல், விளக்கம் கொடுக்காமல் உடனே கைவிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். தான் விரும்பிச் செய்த ஒன்றைக் கூட, சரியில்லை எனத் தோன்றியவுடன் விட்டுவிடும் மனத்திடம் இந்தச் சம்பவத்தில் தெரிகிறது.
வார்த்தையால் கட்டளையிடாமலேயே, தன் சொந்தச் செயலால் மக்களை மாற்றிய தலைமைத்துவம் இது. நாம் மற்றவரிடம் மாற்றத்தை எதிர்பார்க்கும் முன், நம் சொந்த வாழ்வில் அந்த மாற்றத்தைச் செய்து காட்டுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.