செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா?

அறிவியல் உண்மைகள்

பூமிக்கு வெளியே உள்ள கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (European Space Agency) செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய நீராதாரத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது அறிவியல் ஆர்வலர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கோட்டுப் பகுதியில், ‘வாலிஸ் மரினெரிஸ்’ (Valles Marineris) என்ற பள்ளத்தாக்கில், சுமார் 3.7 கிலோமீட்டர் ஆழத்திற்கு, தடிமனான பனிக்கட்டிப் படலம் உள்ளது. இது உருகினால், அந்த கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீரின் அளவு, இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிக அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. இறைவன் படைத்த இந்த அண்டத்தில், ஒவ்வொரு கோளிலும் அவன் வைத்திருக்கும் ரகசியங்கள் வியக்க வைக்கின்றன. அவனது ஆற்றலையும் ஞானத்தையும் இது நமக்கு உணர்த்துகிறது.

ஆதாரம்: விகடன்