கஅபா புதுப்பிக்கப்பட்டபோது கல் சுமந்த சிறுவர் — அன்று நடந்த ஒரு நிகழ்வு
வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்ததும் மயங்கி விழுந்தார்கள்
لَمَّا بُنِيَتِ الكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الحِجَارَةَ، فَقَالَ العَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ، فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «أَرِنِي إِزَارِي» فَشَدَّهُ عَلَيْهِ
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து சென்றார்கள். அப்போது அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களை நோக்கி (கல்சுமப்பதற்கு வசதியாக), ‘உன்னுடைய வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்!’ எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) பிறகு (ஆடையின்றி உள்ளோம் என்றறிந்து) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள்.
அவர்களின் கண்கள் வானத்தை நோக்கியிருந்தன. (அப்பாஸ்(ரலி) அவர்களை நோக்கி) ‘என்னுடைய ஆடையை எனக்குக் கொடுங்கள்!’ என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்த உடனே) அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல் – (புகாரி: 1582) ➚
நபியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவர்களின் மானம் காக்கப்பட்டது. அல்லாஹ் தேர்ந்தெடுத்தவரை முதல் நாளிலிருந்தே காக்கிறான்.
எல்லோரும் செய்த ஒன்றை அவர்களால் செய்ய முடியவில்லை. கூட்டம் செய்கிறது என்பது ஒருபோதும் ஒரு காரணம் அல்ல.