“இந்த வசனம் எங்களுக்கு இறங்கியிருந்தால் அந்நாளைப் பண்டிகையாக ஆக்கியிருப்போம்”

ஹதீஸ் சம்பவங்கள்

உமர் (ரலி) சொன்ன பதில் — அது இறங்கிய நாளும் இடமும் எனக்குத் தெரியும்

قَالَتِ اليَهُودُ لِعُمَرَ: إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً لَوْ نَزَلَتْ فِينَا لاَتَّخَذْنَاهَا عِيدًا، فَقَالَ عُمَرُ: ” إِنِّي لَأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ، وَأَيْنَ أُنْزِلَتْ، وَأَيْنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَتْ: يَوْمَ عَرَفَةَ وَإِنَّا وَاللَّهِ بِعَرَفَةَ – قَالَ سُفْيَانُ: وَأَشُكُّ – كَانَ يَوْمَ الجُمُعَةِ أَمْ لاَ ” {اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ} [المائدة: 3]

தாரிக் இப்னு யுஹாப் (ரஹ்) அறிவித்தார். யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். உமர் (ரலி), ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்: ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்’ எனும் (அல்குர்ஆன்: 05:3)➚வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.

அறிவிப்பவர்: தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்)

நூல் – (புகாரி: 4606)

மார்க்கம் முழுமையாக்கப்பட்ட நாள் அரஃபாவில் ஏற்கெனவே ஒரு பெருநாளாக இருந்தது. புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை.

வெளியாட்கள் நம் வேதத்தின் மதிப்பைச் சொல்லும்போது, நாம் அதை எத்தனை சாதாரணமாக ஓதிக் கடக்கிறோம் என்று தோன்றுகிறது.