
இணைவைப்பில் விழுவதற்கான காரணங்கள் தவறான கற்பனைகளாலும் அவசியம் அறிய வேண்டிய விசயங்களை அறியாததாலும் அதிகமான மக்கள் இணைவைப்பில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே இணைவைப்பதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள விசயங்களில் உண்மை நிலையை இவர்கள் அறிந்து கொண்டால் ஒருபோதும் இணைவைக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடைதல் பாவம் செய்பவர்களால் அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற நம்பிக்கையால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் கையேந்துகிறார்கள். இவர்கள் மகான்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை விட கருணை மிகுந்தவர்கள் […]