வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா? இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? பதில் வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன) அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ […]