Category: 10 நிமிட உரைகள்

b110

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன?

இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் நம்பப்படுகிறது. குர்ஆன், ஹதீஸின் இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். குர்ஆன் என்பது லவ்ஹூல் மஹ்பூல் எனும் மூலப்பிரதியில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக இறைவன் கொடுத்து அனுப்பியதாகும். இறைவனிடமிருந்து வந்த செய்திகள் அனைத்தும் குர்ஆனாகாது. அது போல் ஜிப்ரீல் மூலம் வந்த அனைத்தும் குர்ஆன் ஆகாது. திருக்குர்ஆனுக்கு அல்லாஹ்விடம் […]

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் […]

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது […]

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன்: […]

உயிரூட்ட வரும் உன்னத ரமலான்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன்: 2:185)➚ இது அல்லாஹ்வின் வசனம். ஆம்! ரமளானின் சிறப்பை உணர்த்துகின்ற வசனமாகும். உண்மையில் ரமளான் என்பது, திருக்குர்ஆன் இறங்கிய மாதத்திற்கு வல்ல ரஹ்மான் எடுக்கின்ற திருவிழாவாகும். விழா என்றதும் நமக்கு ஒருவிதமான ஒவ்வாமை வந்து விடும். அந்த ஒவ்வாமை வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. […]

இன்ஷா அல்லாஹ் சொல்வதின் முக்கியத்துவம்

அடிப்படைக் கொள்கை : ஒரு முஸ்லிம் எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் அந்த காரியம் அல்லாஹ் நினைத்தாலே தவிர அது நடைபெறாது என்று உறுதியாக நம்ப வேண்டும்.இதை பல குர்ஆன் வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் நமக்கு தெளிபடுதுகிறது. (நபியே!) நீர் கூறுவீராக (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.(அல்(அல்குர்ஆன்: 3:26)➚,27) […]

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!” […]

இணை வைப்போர் – அன்றும் / இன்றும்

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம். ‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், […]

நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்

சுத்தம் “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்துக்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலது கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), (புகாரி: 153) ➚ “எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கின்றது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து […]

அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்

இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன் நோன்பு நோற்கச் சொல்கிறது. அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல், கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது. இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை. பசிக்கின்றது; […]

இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்

சட்டத்தின் கண்கள் சாட்சிகள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள். உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் […]

டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த […]

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் […]

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை தியாகமா? துரோகமா? என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும். நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் […]

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை. 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் […]

குருதி கொடுப்போம்

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்‘ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, […]

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை […]

தவ்ஹீத்வாதிகளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது. இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் […]

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

“உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்” என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான். “உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். […]

நாத்தனார்களும் நாறும் சண்டைகளும் கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பார்த்து வருகிறோம். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் கணவன், மனைவியின் வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் போய்விடும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்றான மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். மாமியார், […]

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்!

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் […]

அந்நாளின் அழைப்பு!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அவர்களுடைய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை தனிமையிலும், மக்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் கடைபிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக அறிவுரை கூறுகின்றேன். கண்ணியத்திற்குரியவர்களே! எந்த ஒரு பேச்சு நமக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துமோ, எந்த ஒன்றை பற்றி சிந்திப்பது நமது ஈமானை அதிகப்படுத்துமோ, எந்த ஒன்றைப் பற்றி சிந்திப்பது நமது […]

இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைத் தூதர் நூஹ் நபி அவர்கள் 950 ஆண்டு காலம் வாழ்ந்து அழைப்புப் பணியாற்றிய ஓர் உன்னதத் தூதர். ஒரு நூற்றாண்டல்ல! சுமார் 10 நூற்றாண்டுகள் ஓயாது, உரக்கவும் உள்ளூரவும், இரைந்தும் இரகசியமாகவும், தனியாகவும் கூட்டாகவும் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் அவர்களது […]

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!

கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வின் சட்டங்களை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்தக் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு […]

யார் இந்த முட்டாள்கள்?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னனிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் […]

உள்ளம் உறுதி பெற!

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதருடைய பாசத்திற்குரிய தோழர்கள் மீதும், குடும்பத்தார்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூடியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் தக்வாவை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய பயத்தை முன்வைத்தும், அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணி வாழும்படியும், எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, தக்வாவே அடிப்படை வெற்றிக்கு காரணம் என்று எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு ஸுப்ஹானஹு […]

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் […]

அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள்!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவைக் கொண்டு உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்ப்பம் செய்கிறேன் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகிறான். அல்லாஹ்வை நம்பினால் உதவி வரும்! إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் […]

சரித்திரம் படிப்பாய் பெண்ணே! புது சாதனை படைப்பாய் கண்ணே!!

ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களும் நம்மைக் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறது. நாமும் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு இரு பெருநாட்களையும் வழியனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் மாற்றங்களையும் நாம் பெற்றிருக்கின்றோமா? என்பது தான் இப்போது நாம் மிகவும் அவசியமாக அலச வேண்டிய விஷயமாகும். நோன்புப் பெருநாளாக இருந்தாலும், தியாகத் திருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் அந்தப் பெருநாட்களின் மூலம் நாம் […]

சிறு துளி! பெரு வெள்ளம்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல கடமைகளும், உபரியான வணக்கங்களும் உள்ளன. எந்த அளவிற்கென்றால் சின்னச் சின்ன […]

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது […]

நரகம் – ஒரு நேர்முகம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் […]

del – உலகம் பிறந்தது எதற்காக?

திருமறைக் குர்ஆனையும், திருநபி வழிமுறையையும் கொள்கையாகக் கொண்ட நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ தீமையான காரியங்கள், இணை வைப்புக் காரியங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றில் பல தீமைகளில் சமுதாயம் தீமையெனத் தெரிந்தே மூழ்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக வட்டி, வரதட்சணை, சூதாட்டம், மது பானங்கள், சினிமா போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தீமை என்றே உணரப்படாமல், நன்மை என்ற பெயரில் பல்வேறு இணை வைப்புக் காரியங்கள் தலை விரித்தாடுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் வந்து […]

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? […]

இஸ்திஃக்ஃபார்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! வல்ல ரஹ்மானின் அளப்பெரும் கிருபையால் இவ்வருட சங்கை மிகு ரமளானில் நாம் அனைவரும் இருந்துகொண்டிருக்கின்றோம். நமக்கும் வல்ல ரஹ்மானுக்கும் அதிக நெருக்கம் உள்ள இவ்வேளையில், அவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு தேடுபவர்களாக இருக்க வேண்டும். கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்… அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? […]

அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை குழப்பங்கள் சூழ்ந்த காலம் என நம்முடைய மார்க்கம் எதை எச்சரித்ததோ அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். நமக்கு முந்தயை சமுதாயங்கள் எந்தெந்த பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ அந்தப் பாவங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, சமூகம் உட்பட என அனைத்து விஷயங்களிலும் நாம் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எத்தகைய […]

வெறுக்கப்பட்ட குணங்கள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன் கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12) سورة الحجرات […]

இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம்

இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம் முன்னுரை மனித வாழ்வில் இடையூறு என்பது ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களாக இருக்கக்கூடிய நாம் பிறருக்கு இடையூறு அளிப்பதையும், இடையூறு அளிக்கும் விஷயங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. அவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய ஏராளமான விஷயங்களில் சிலவற்றை இந்த உரையில் கான்போம். சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர் وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ […]

இறைநம்பிக்கையாளின் தன்மைகள்

கட்டடத்தைப் போன்றவர்கள் حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ – رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். […]

இஸ்லாமியப் போர்கள்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பத்ருப் போரில் இறையுதவி நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்’’ என்று உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன்: 8:9)➚ உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் […]

நன்மையையும் தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே

நாம் வாழுகின்ற இந்த உலகத்திலே ஒரு மனிதனுக்கு பல விதமான சோதனைகள் வந்தடையும். அதில் நன்மையான காரியம் நடந்தாலும் தீமை நடந்தாலும் அது விதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாக இருந்தாலும் ஒரு தீமையான விஷயத்தை சந்தோஷமாக ஒரு நல்லதாக மாற்றக்கூடிய அதிகாரத்தை அல்லாஹ் நம் கரத்திலே வழங்கியுள்ளான். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் […]

அழைப்புப்பணியின் அவசியம்

முன்னுரை அகிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் ஏக நாயன் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஓரே மார்க்கம் புனித இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான். முதல் மனிதரும் தூதருமான ஆதம் (அலை) தொடங்கி இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை இந்த பூமியில் மக்களை அழைத்தது இந்த சத்திய மார்க்கத்தை நோக்கித் தான். எல்லா இறைத்தூதர்களின் பிரதான பணியாக இந்த ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்புப்பணியே இருந்தது என்பதை இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். […]

del-வந்த வழியில் திரும்பியோர்

மனிதனை இவ்வுலகில் படைத்து, பரிபாலனம் செய்து வரும் இறைவன் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்தை மனிதர்களின் நேர்வழிக்காக வழங்கி அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றான். அந்த வகையில் யார் எல்லாம் இறைவனின் வார்த்தைகளையும், நபியவர்களின் வழிகாட்டல்களையும் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றான். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இந்த மார்க்கம் யாரையும் நிர்பந்தம் செய்யும் வழிகாட்டல் அல்ல. மாறாக யார் […]

வறுமை ஒரு வரப்பிரசாதம்

”ஏழ்மை, வறுமை” போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப்படுகிறது. அனைவரும் நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழவேண்டும், நமக்கு எந்த சோதனைகளும் ஏற்படவே கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை அதிகமாக செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் […]

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் […]

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று உலகத்தின் எத்திசையை நோக்கினாலும், மனிதன் அமைதிக்காக ஏங்குகின்றான். எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அத்துமீறல், ஆக்கிரமிப்புப் போர், குண்டு வெடிப்பு, ஏமாற்றுதல், மோசடி, பொருளாதாரச் சுரண்டல், கலப்படம் என்று உலகின் எல்லாப் பகுதிகளும் அமைதியற்றுக் காணப்படுகிறது. அதே போல் […]

மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள்

ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே! அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் கட்டளைப்படியே வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கொள்கையை நோக்கி வருமாறு மனிதகுலத்தைத் திருக்குர்ஆன் அழைக்கிறது. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 2:21)➚ விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் […]

இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம்

இஸ்லாம் அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்டும் மார்க்கமாகும். இன்றைக்கு உலகெங்கிலும் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்றும், தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய மார்க்கம் என்றும் பொய்ப்பிரச்சாரம் வீரியமாக செய்யப் பட்டாலும், உண்மை இஸ்லாத்தைப் படிப்பவர்களை அது தன் பக்கம் ஈர்த்து வருகின்றது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உணவாக உட்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ள காரணத்தினால் அது “ஜீவ காருண்யத்திற்கு” எதிரான மார்க்கம் என்றும், இதுவே இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதற்கு ஒரு […]

மனித உயிர் புனிதமானது

மனித உயிர் புனிதமானது; மதிக்கப்பட வேண்டியது; முக்கியத்துவமாகக் கருதப்பட வேண்டியது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர், உயர்ந்தவர்–தாழ்ந்தவர், பணக்காரர் – ஏழை, ஆண்கள் – பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது. ஆனால், இன்றைய நவீன நாகரிக காலத்தில் மனித உயிர்கள் துச்சமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றது. மதிக்கப்பட வேண்டிய விதத்தில் மனித உயிர்களை மதிக்காமல் இழிவுபடுத்தப்படுகின்றது. ஐந்து அறிவு பிராணிகளின் உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மனித உயிர்களுக்கு கொடுக்கப்படாமல் கொன்று […]

இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை

அன்றும் இன்றும் இஸ்லாம் விமர்சனத்திற்குரிய மார்க்கமாகவே இருந்துள்ளது. என்றாலும் அதன் அறிவுரைகளும் போதனைகளும் எல்லோரின் உள்ளங்களையும் ஈர்த்தது. இந்த வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதிகளையும் அறிவற்ற விமர்சனங்களையும் வைத்தனர். இறைவனின் பேருதவியால் அந்தந்த கால அறிஞர்கள் இவர்களின் சத்தற்ற வாதங்களுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்து இஸ்லாத்தின் மேன்மையை மென்மேலும் வளர்த்து வந்தனர். இதே போன்று இன்றைய காலத்திலும் இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் கடுமையாக இருப்பதையும் அதே அளவு அதன் வளர்ச்சி இருப்பதையும் நாம் […]

Next Page » « Previous Page