இந்த இறையச்சம் ஈது வரையா? இறுதி வரையா? ரமளான் மாதத் தலைப்பிறையைப் பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு ஐங்கால ஜமாஅத் தொழுகைகளில் ஜன சமுத்திரம் திரண்டது என்று சொன்னால் அது மிகையல்ல! சின்னஞ்சிறுவர்கள், இளைய தலைமுறையினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வாழ்க்கையின் அனைத்துப் பருவத்தினரும் பள்ளிவாசலுக்குப் படையெடுத்து வந்தனர். பெண்கள் அனுமதிக்கப் பட்ட […]