ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ 2392 மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து […]