Tamil Bayan Points

அடியானின் பாதங்கள் நகராது

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on October 12, 2016 by Trichy Farook

விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.

அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி)

நூல் : திர்மிதீ (2341)

இது சரியான செய்தி என்று மக்கள் பரவலாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்தச் செய்திக்குரிய அனைத்து அறிவிப்பாளர் தொடர்களையும் கவனித்தால் அந்த அனைத்து வழிகளும் பலவீனமானவையாக அமைந்துள்ளன. சரியான ஒரு அறிவிப்பாளர் தொடர் கூட இந்தச் செய்திக்கு இல்லை.

உதாரணத்திற்கு, மேற்கண்ட அறிவிப்பில் அபூபக்ர் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் சரியான நினைவாற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பதால் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இந்த செய்திக்குரிய அனைத்து வழிகளும் பலவீனமானதாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் கூறக்கூடாது.