Tamil Bayan Points

உமரின் அற்புத திறமை

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on October 14, 2016 by Trichy Farook

உமரின் அழைப்பு

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்” எனக்கூறினார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள்இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்கதொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தைபடைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன்பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள்,தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர்என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402

இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிரயாரும் அதை அறிய மாட்டார்.

(அல்குர்ஆன் 6:59)