Author: Kamila

எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?

எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா? கேட்டகலாம் இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. […]

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா? நபி(ஸல்) கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை. நபிகள் நாயகம் […]

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா? செய்யலாம். தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” […]

இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?

இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு? இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதியிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் […]

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம். எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் […]

நோன்பின் மாண்புகள்

நோன்பின் மாண்புகள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 2:184)➚ நம்மிடம் இறையச்சத்தை ஏற்படுத்துவற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இந்த நோன்பின் […]

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா? பூஜிக்கப்படாத உணவாக இருந்தால் ஹராம் இல்லை. அந்த சபைக்கு சென்று உண்ணக்கூடாது, ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை ஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது. […]

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா? தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம். நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், […]

கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?

கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா? இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது. மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது. وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى […]

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? அணியலாம். அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார். எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும். எந்தக் காரியம் வலது […]

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? பருகுவதுதான் தவறு. வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம். போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் […]

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா? தவறுகளை சுட்டிக்காட்டலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆயுதம் தாங்கி போராடி மக்களை கொன்று குவிக்கக் கூடாது. ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ […]

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் […]

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா? வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி). (முஸ்லிம்: 3258) ➚ எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் […]

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம். மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் […]

காது குத்த அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா?

காது குத்த அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா? காது குத்தக் கூடாது. காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான். “அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். […]

குடியை கெடுக்கும் குடிப் பழக்கம்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையை படித்தவர்களும் படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று […]

தலாக் மற்றும் குலா என்றால் என்ன? வேறுபாடு என்ன?

தலாக் மற்றும் குலா என்றால் என்ன? வேறுபாடு என்ன? மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! […]

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? யாரைக் கண்டிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தவறு இருந்தால் மட்டுமே கண்டிக்க வேண்டும். அவர்களிடம் தவறு இல்லாத போது கண்டிப்பது பெரும்பாவமாகும். கணவன் மனைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஒருவர் மற்றவருடைய தேவையைப் பூர்த்தி செய்வது அவ்விருவரின் மீதுள்ள கடமையாகும். இதை மார்க்கம் நன்மையான காரியம் எனக் கூறுகின்றது. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ […]

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்?

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்? கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையில் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப் படுகின்றது. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு […]

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً  ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது […]

இரவுத் தொழுகையின் சிறப்புகள்

இரவுத் தொழுகை புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி,அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! ரமளான் மாதத்தில் விடாது கடைப்பிடிக்கும் இந்த […]

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா?

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா? இல்லை. ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா? ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர். الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ […]

எனது விருப்பமின்றி, மாப்பிள்ளையை பார்க்கின்றனர்!

பெண்ணின் புகார் எனது விருப்பம் இல்லாத மாப்பிள்ளையை எனக்கு திருமணம் செய்வதற்காக எனது பெற்றோர் நிச்சயித்துள்ளனர். நான் என்ன செய்வது? அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுக்கலாமா? மறுக்கலாம். தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம்செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் (ஏதேனும் ஒரு […]

5) பங்கிடுதல் மற்றும் பிற சட்டங்கள்

பங்கிடுதல் குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை. அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன்: 22:36)➚ இந்த வசனத்தில் அல்லாஹ் […]

4) பிராணியை அறுத்தல்

எங்கே கொடுப்பது? முஸல்லா எனும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி). (புகாரி: 5552) ➚,(அபூதாவூத்: 2428) ➚,(நஸாயீ: 1571) ➚ நபி (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக நபி […]

3) குர்பானிப் பிராணிகள்

குர்பானிப் பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது. கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். (அல்குர்ஆன்: 22:28)➚ இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை […]

2) யார்மீது கடமை?

யார்மீது கடமை? குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) […]

1) முன்னுரை

குர்பானியின் சட்டங்கள் தொகுப்பு : இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர்கள், மேலப்பாளையம்) முன்னுரை நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. […]

5) அமீரின் அதிகாரங்கள்

அமீரின் அதிகாரங்கள் ஸகாத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் حدثنا أبو عاصم الضحاك بن مخلد عن زكرياء بن إسحاق عن يحيى بن عبد الله بن صيفي عن أبي معبد عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله عنه إلى اليمن فقال ادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني […]

4) அமீர் என்பவர் யார்?

அமீர் தலைமைப் பதவி வகிப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து நாம் இது வரை அறிந்தோம். இனி அமீர் என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதைப் பார்ப்போம். முதலில் இந்தச் சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்று பார்ப்போம். அம்ரு என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததே அமீர் எனும் சொல். அம்ர் என்றால் உத்தரவு போடுதல், கட்டளையிடுதல் என்பது பொருளாகும். அமீர் என்றால் கட்டளையிடுபவர், உத்தரவு இடுபவர் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஒருவரிடம் ஒன்றைச் செய்யுமாறு சாதாரணமாகந் […]

2) அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.(அல்குர்ஆன்: 4:59)➚ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ […]

சுன்னத்தான நோன்புகள்

சுன்னத்தான நோன்புகள் 2:185➚ شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்: 2:185)➚ என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான் மாதம் […]

005. குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா?

குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா? கூடாது. கொம்பு உடைந்தால் தவறில்லை. குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அல்பரா பின் ஆசிப் (ரலி), (திர்மிதீ: 1497, 1417) ➚,(அபூதாவூத்: 4293) […]

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? உடனே தொழக் கூடாது. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் […]

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா? இல்லை. இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். […]

சொத்துப்பங்கீடு உதாரணம் – 1

தாய், தந்தைக்கு தனித்தனியாக 6ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.(அல்குர்ஆன்: 4:11)➚ மனைவிக்கு 8ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.(அல்குர்ஆன்: 4:12)➚ மீதமுள்ளது பிள்ளைகளுக்கு மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு […]

நாளின் ஆரம்பம் இரவா? பகலா?

நாளின் துவக்கம் இரவு தான் நாளின் ஆரம்பம் இரவா? அல்லது பகலா? என்பதை விரிவாக குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம். صحيح مسلم حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى الْبَهْرَانِيِّ، قَالَ: ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى […]

பித்ராவை வேறு ஊரில் விநியோகிக்கலாமா?

விநியோகிக்கலாம். ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். (புகாரி: 1395, 1496, 4347) ➚ “அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” என்று […]

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா? படுக்கலாம். குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. முதல் ஹதீஸ் ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(திர்மிதீ: 2768, 2692) ➚,(அஹ்மத்: 7862, 7524, 8041, 7698) ➚ இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது […]

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்?

அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், “(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் […]

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா?

நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? பதில்: இல்லை. நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الحُبَابِ قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي سُلَيمُ بْنُ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا […]

செலவை கழித்த பிறகா, ஜகாத்?

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? பதில்: இல்லை. இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ نَافِعٍ […]

கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடலாமா?

எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? விளக்கம் தரவும். பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி […]

புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா?

புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா? இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது. حَدَّثَنَا مُحَمَّدُ […]

குடியேறும் போது ஃபாத்திஹா உண்டா?

குடியேறும் போது ஃபாத்திஹா உண்டா? குடியேறும் போது விருந்து தரலாம். பாத்தியா ஒதுவது பித்அத் ஆகும். இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள்செய்து வருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால் காய்ச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத்தொழுகை நடத்த வேண்டும். ஃபாத்திஹா ஓத வேண்டும். கூலிக்கு மாறடிக்கும்ஆலிம்களைக் கூட்டி வந்து வீட்டில் குர்ஆன் முழுவதையும் ஓதச் சொல்ல வேண்டும்என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவற்றுக்குமார்க்கத்தில் அனுமதி இல்லை. புதுவீடு கட்டி மக்களை அழைத்து […]

முக்கிய அடிப்படை ஆதாரங்கள்

முஃமினா? முஸ்லிமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று […]

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை. ஜஃபர் (ரலி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி […]

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? 

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? விரும்பினால் வைக்கலாம். துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது. أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ، قَالَ: حَدَّثَنِي أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ، عَنْ عَمْرِو بْنِ […]

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள் ஆஷூரா பற்றிய ஹதீஸில், ஒரு ஹதீஸ் ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாகவும் , மற்றொரு ஹதீஸில் நான்அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றும் கூறியுள்ளீர்கள் ! அப்படியென்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம்ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே? விளக்கம் தரவும். ஹஜ் […]

Next Page » « Previous Page