Author: Trichy Farook

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா?

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா? அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ غُلَامٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى» ஓவ்வொரு குழந்தையும் அதற்கான […]

பெயர் சூட்டு விழா நடத்தலாமா?

பெயர் சூட்டு விழா நடத்தலாமா? குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக தனியே ஒரு விழாக் கொண்டாடுவதை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட தேவையற்ற கலாச்சாரமாகும். குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அக்குழந்தைக்காக ஆடு அறுக்கலாம். இதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டுவது நபிவழி. இவ்வாறு செய்வது தவறல்ல. حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ […]

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா? இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை அறிவிக்கும் பெயர்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்குச் சூட்டக்கூடாது. எந்தத் தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றதோ அது போன்ற தன்மைகளைக் கொண்ட பெயர்களை மனிதர்களுக்கு சூட்டுவது தவறல்ல. சில தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருந்தாலும் இறைவன் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் மனிதர்கள் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ஹகம் என்ற பெயரைச் சூட்டவேண்டாமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

அகீகா ஏழாம் நாள் தாண்டி கொடுக்கலாமா?

அகீகா ஏழாம் நாள் தாண்டி கொடுக்கலாமா? பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாள் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். அகீகாவிற்காக ஏழாம் நாள்,பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி),நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், பாகம் :5, பக்கம் :136, தப்ரானீ-ஸகீர், பாகம் :2, பக்கம் :29, பைஹகீ பாகம் :9, பக்கம் […]

பிள்ளைகளிடம் பொய் வாக்குறுதி கொடுக்கலாமா?

பிள்ளைகளிடம் பொய் வாக்குறுதி கொடுக்கலாமா? حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سِنَانٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ بُدَيْلٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا […]

நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா?

நபிவு, அஃப்லஹ், ரபாஹ், பரக்கா, யஸார் என்ற பெயர்கள் வைக்கலாமா? இதுபோன்ற சில பெயர்களை வைக்கக்கூடாது என்று சில நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான விவரங்களைக் காண்போம். حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الرُّكَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ. وقَالَ يَحْيَى: أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ الرُّكَيْنَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ […]

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா? ஒருவரின் குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அன்னியர்களாக இருந்தாலும் ஒரே சட்டம் தான். குழந்தை இல்லாதவர்கள் அன்பைப் பொழிவதற்கும், தள்ளாத வயதில் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் எந்தக் குழந்தையையும் எடுத்து வளர்க்கலாம். ஆனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், அன்னியரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும் அவர்கள் சொந்தப்பிள்ளைகளாக மாட்டார்கள். இது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். இது குறித்து நம்முடைய திருக்குர்ஆன் […]

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்?

பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக எளிதாக இருக்கும் நிலையில் அகீகா ஏன்? அகீகாவுடன் தலைமுடி மழிப்பது தொடர்பான செய்தி தாங்கள் குறிப்பிடுவது போல் புகாரி, முஸ்லிமில் இல்லை. முஸ்னத் அஹ்மதில் (19327) வது ஹதீஸாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது. مسند أحمد مخرجا (33/ 356) 20188 – حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبَانُ الْعَطَّارُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ […]

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா?

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா? யாரேனும் நமக்கு தீமை செய்தால் அவர்களை மன்னிக்கவும் அவர்கள் செய்த தீமையின் அளவுக்கு தண்டிக்கவும் அல்லாஹ் நமக்கு உரிமை வழங்கியுள்ளான். ஒருவர் நமக்குச்செய்த அநீதியை மனித்துத் தான் ஆகவேண்டும் என்று எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. ஒருவரை மன்னிக்காமல் நாம் மரணித்து விட்டால் அதற்காக அல்லாஹ் மறுமையில் நம்மைக் கேள்வி கேட்க மாட்டான். மறுமையில் நாம் முறையிடும் போது நமக்கு அல்லாஹ் நீதியும் வழங்குவான். ஆனால் தண்டிப்பதைவிட மன்னிப்பது மிகவும் சிறந்த்து. […]

ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்?

ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்? யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு இஸ்லாம் கூறவில்லை. வெளிப்படையான செயல்களை வைத்தும் தெரிந்தவர்களிடம் விசாரித்தும் ஒருவரை மனதளவில் நம்பலாம். என்றாலும் நம்பிக்கை இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அந்த அளவு எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் காட்டும் வழியாகும். அதாவது மனதில் தான் நம்பிக்கையை வைத்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாதது போல் தான் அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும். கடன் கொடுத்தால் எழுதிக் […]

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை?

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை? பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் […]

நட்பின் இலக்கணம் என்ன

நட்பின் இலக்கணம் என்ன? அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), (முஸ்லிம்: 4760) ➚ நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால் ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக […]

ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்டேன் எனக்கு மன்னிப்பு உண்டா?

ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்டேன் எனக்கு மன்னிப்பு உண்டா? ஒரு பாவத்தைச் செய்து திருந்தி விட்டால் அந்தப் பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது. حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ […]

வலது கையால் சாப்பிடுகையில், இடது கையால் நீர் அருந்தலாமா?

வலது கையால் சாப்பிடுகையில், இடது கையால் நீர் அருந்தலாமா? சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ،، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ […]

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு தீர்வு என்ன?

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு தீர்வு என்ன? ஒரு தீமை பல வழிகளில் பரவ வாய்ப்பு இருந்தால் இஸ்லாம் அந்த வழிகள் அனைத்தையும் அடைத்துவிடும். போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் இஸ்லாம் இந்த வழிமுறையைக் கடைபிடிக்கின்றது. குடிகாரர்களுக்கு தண்டனை தருவதால் மட்டும் போதைப் பொருட்களை அழித்துவிட முடியாது. போதைப் பொருட்களை முற்றிலுமாக அழித்தல் அவை நாட்டுக்குள் ஊடுறவிடாமல் தடுத்தல் இவை பரவுவதற்கு காரணமாக உள்ள அனைவரையும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமே போதைப் பொருட்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும். போதைப் […]

விவாதத்தில் ஆபாசம் தேவையா?

விவாதத்தில் ஆபாசம் தேவையா? களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நீங்கள் விவாதம் செய்த சில தலைப்புகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. அதைத் தவிர்த்து இருக்கலாமே? களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமாகும். தர்ஹா, தரீக்கா, மவ்லிது, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், மத்ஹபுகள் இவை அனைத்தையும் சரி என்று வாதிடக் கூடிய ஒரு கூட்டத்துடன் நாம் விவாதம் செய்தோம். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இவை தவறானவை என்பதை நிரூபிக்க […]

பொறுமையின் எல்லை என்ன?

பொறுமையின் எல்லை என்ன? இஸ்லாத்தில் எந்த அளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்? முஹம்மத் இஸ்மாயீல் பொறுமை என்பது இரு வகைப்படும். ஒன்று அல்லாஹ் நமக்குத் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது. நூறு சதவிகிதம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை முறையிட்டாலும் அழுதாலும் அல்லாஹவை விமர்சிக்காமல் இருந்தால் நாம் பொறுமையைக் கடைபிடித்தவர்களாவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அழுதுள்ளனர். ஆனால் மனிதர்கள் நமக்கு அநியாயம் செய்யும் போது பொறுமை காக்க வேண்டுமென்பது கட்டாயம் அல்ல. நாம் விரும்பினால் […]

பட்டப்பெயர் வைத்து விமர்சிக்கலாமா?

பட்டப்பெயர் வைத்து விமர்சிக்கலாமா? பட்டப்பெயர் சூட்டக் கூடாது; புறம் பேசக் கூடாது; ஒருவரின் குறையை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் மனிதனின் மானம் மரியாதை தொடர்பாகக் கூறப்படும் ஆதாரங்களை உரிய முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களின் குறைகளை அம்பலப்படுத்தக் கூடாது என்பதன் பொருள் என்ன? மார்க்கத்துக்கோ மனித குலத்துக்கோ நன்மை தராத போது அப்படி பேசக் கூடாது என்பதே அதன் பொருள். மார்க்கம் என்றாலே […]

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா? ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாத்திற்கு பதில் தர வேண்டும். ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் சலாம் முதலில் சலாம் கூறியவரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க […]

தீர்மானங்களின் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?

தீர்மானங்களின் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை அங்கீகரிப்பது போல் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது. முக்கியமான காரியங்கள் நிகழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கும் நேரடியான சான்றுகள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அல்லாஹு அக்பர் என்று கூறலாம். நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு […]

பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டு சிரிக்கலாமா?

பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டு சிரிக்கலாமா? பள்ளிவாசலில் நகைச்சுவையாக பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் நாம் நகைச் சுவையாக பேசிக் கொள்ளலாம். ஆனால் தொழுகையாளிகளுக்கு இடையூறு இல்லாதவாறு பார்த்துக் கொண்டால் தவறில்லை. நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் பள்ளிவாசலில் சிரித்திருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை பேச்சுகளையும் பேசியுள்ளார்கள். முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை […]

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் […]

குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா?

குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா? இஸ்லாத்தில் போதை தரக்கூடிய மது உள்ளிட்ட அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று நான், கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை […]

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்? நம்முடைய பணத்தை நாம் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கும் போது நம்மிடம் கேட்காமல் அவர் தொழிலில் பயன்படுத்தினால் அதில் நமக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒருவரிடம் அமானிதமாக நாம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தை நமக்குச் சொல்லாமலே எடுத்து ஹராமான தொழிலில் அவர் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது. அதில் நாம் பங்காளியாக மாட்டோம். நீங்கள் சொல்லும் இந்த நிலை அதைவிட இலேசானதாகும். ஏனெனில் உங்களால் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது […]

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா?

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா? மருத்துவக் காப்பீடு கூடாது என்பதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. காய்கள் பழுப்பதற்கு முன்பாக அவை மரத்தில் இருக்கும் நிலையில் அவற்றுக்காக விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். நீங்கள் இதை சுட்டிக்காட்டி மருத்துவ காப்பீடும் இதைப் போன்றது எனக் கூறுகிறீர்கள். காய்கள் கனிந்து பறிக்கப்படுவதற்கு முன்பாக விலை பேசினால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகக் கனிகளை குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் விற்றவர் […]

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்? வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் தான். நமது கடையில் விலை அதிகம் என்று ஒருவருக்குத் தெரிந்தால் நிச்சயம் அவர் நம்மிடம் வாங்க மாட்டார். அதே போல் பக்கத்துக் கடைக்காரரின் விலையை விடக் குறைவாகக் கொடுக்க […]

வியாபாரத்தில் இலவசம்

வியாபாரத்தில் இலவசம் சோப்புக்கு ஷாம்பு இலவசம், கிரைப் வாட்டருக்கு தம்ளர் இலவசம் என்று பலவித பொருட்களுக்கு இலவசம் என்று போட்டு விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற இலவசங்களை சில்லரைக் கடைக் காரர்கள் நுகர்வோருக்கு வழங்காமல் வைத்துக் கொள்வது பாவமான செயலா? இலவசம் என்று போட்டு வரும் பொருட்களில் சில்லரைக் கடைக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலாபத் தொகையைக் குறைத்து விடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பொதுவாக இலவசம் என்று எதுவுமே கிடையாது. சோப்புக்கு ஷாம்பு இலவசம் என்றால், சோப்புக்கும் […]

தீமைக்கு பயன்படும் பொருளை விற்கலாமா?

தீமையான காரியத்திற்கு உதவி செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே பூஜைக்காக பூ விற்பது தாயத்து விற்பது மற்றும் பேங்கிற்காகக் கட்டடம் கட்டித் தருவது போன்ற விஷயங்கள் மாக்கத்தில் கூடுமா? கூடாதா? எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது. (அல்குர்ஆன்: 5:2)➚ தீமையான காரியங்களுக்கு உதவக் […]

நாள் வாடகை வட்டியாகுமா?

நாள் வாடகை வட்டியாகுமா? வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது நம்முடைய பணம் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு காலம் அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது. நம்முடைய பொருள் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு கால, அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும். இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவன் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போகிறது. நோட்டு […]

கலைஞர் காப்பீட்டுதிட்டம் கூடுமா?

கலைஞர் காப்பீட்டுதிட்டம் கூடுமா? பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். உதாரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து மாதம் ஒரு தொகை செலுத்த வேண்டும். நாம் செலுத்திய பணத்துக்கு போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள். இதனால் இதைக் கூடாது என்பது சரியானது தான். ஆனால் மருத்துவக் […]

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்? ஸலாம்! சகோதரரே! ஒருவர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு பண வசதி உள்ள நிலையில் கடன்கொடுத்தவர் காணவில்லை, தேடியும் பிரயோஜனமில்லை என்றால் அந்த கடன் தொகையை கடன் பெற்றுக்கொண்டவர் கடன் கொடுத்தவர் சார்பாக அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்துவிடலாம் என்று மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்தார். அது தவறு என்றும் காணாமல் போன கூலியாளின் கொடுக்கப்பட வேண்டிய கூலித்தொகையையே அமானிதமாக பாதுகாத்து அதை மூலதனமாக்கி அனைத்தையும் அந்த கூலியாள் திரும்ப […]

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (திர்மிதீ: 296) ➚ ஆனாலும் பொது நலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. […]

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால்

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுத்தீர்களோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி கேட்கக் கூடாது. நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) (புகாரி: 2176) ➚ இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே […]

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா?

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா? தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் […]

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா? தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை. (வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்: 2783) ➚ கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. […]

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசித்தல்

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசித்தல் உங்கள் தந்தை வட்டிக்கு கடன் வாங்கியதால் அந்தப் பணம் ஹராமாகாது. மாறாக வட்டி கொடுத்த குற்றத்தையே அவர் செய்திருக்கிறார். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் வசித்தது கூட ஹராமான சம்பாத்தியத்தில் அல்ல. ஒரு ஹராமான செயலுக்குத் துணை செய்த குற்றமே அவரைச் சேரும். அடுத்ததாக ஹராமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர் வீடு கட்டி இருந்தால் அது அவருக்குத் தான் ஹராம். வாரிசு உரிமைப்படி அச்சொத்து […]

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா?

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா? வாக்கு மீறுவதும், நம்பிக்கை மோசடி செய்வதும் எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக் கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியம். நபி (ஸல்) அவர்கள் தனது எதிரிகளுடன் எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்தார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் மோசடி செய்ததில்லை. ஒரு சாராரின் மீதுள்ள வெறுப்பால் நாம் அநியாயம் செய்துவிடக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது. يَاأَيُّهَا الَّذِينَ […]

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?

உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா? ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாக செய்வதும் மார்க்கத்தில் கூடுமா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள். நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற […]

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா?

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா? தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடுக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே அவற்றை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ […]

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா? கோயில் நிலம் விலைக்கு வந்தால் அதை நாம் வாங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் வியாபாரமாகவே இது உள்ளது. இந்த நிலத்தை விலைக்கு வாங்குவதால் மார்க்க சட்ட திட்டங்களை புறக்கணிக்கும் நிலை இல்லை. எனவே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த வியாபாரம் அதன் உரிமையாளர்களால் முறைப்படி செய்யப்பட வேண்டும். நிர்வாகியாக இருப்பவர் கள்ளத்தனமாக விற்பனைச் செய்து அதைச் சுருட்ட நினைத்தால் அந்த வியாபாரம் […]

வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?

வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா? நீங்கள் இவ்வாறு கமிஷன் வாங்குவது நிர்வாகத்திற்குத் தெரிந்து அவர்கள் சம்மதித்தால் வாங்கிக் கொள்ளலாம். அது உங்கள் கம்பெனியினர் உங்களுக்குத் தருகின்ற அன்பளிப்பாக ஆகிவிடும். ஆனால் கம்பெனியினருக்குத் தெரியாமல் கமிஷன் வாங்குவதற்கு அனுமதி இல்லை. அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்)அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, […]

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாம் என்பது சரியா?

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாம் என்பது சரியா? நாம் தேடிப் பார்த்த வரையில் இப்படி ஒரு பலவீனமான ஹதீஸ் கூட எந்த நூலிலும் இல்லை. யூதர்கள் வட்டித் தொழில் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள். யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் […]

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா? நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, “அப்பாஸின் தந்தையே! நான் கைத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கின்றேன். “யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான். […]

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா? கூடாது யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர். யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள். கோரைப் பற்கள் உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي […]

சூடான உணவு சாப்பிடலாமா?

சூடான உணவு சாப்பிடலாமா? சாப்பிடலாம் உணவுப் பொருட்களை சூடான நிலையில் உண்ணக்கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே இருக்கின்றன. 1958 حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ […]

ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா?

ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா? பருகலாம் ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள். حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ […]

இரவில் பறவையை வேட்டையாடலாமா?

இரவில் பறவையை வேட்டையாடலாமா? வேட்டையாடலாம் வேட்டையாடுவது மார்க்கத்தில் பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதி முறைகளும் மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவில் வேட்டையாடுவது கூடாது என்று எந்தத் தடையையும் குர்ஆனிலோ நபி மொழிகளிலோ நாம் காண முடியவில்லை. எனவே இரவிலோ பகலிலோ வேட்டையாடலாம்.

பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா?

பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா? நிழ்ச்சி தான் ஹராம். உணவு அல்ல. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் […]

வினிகர் பயன்படுத்தலாமா?

வினிகர் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம் வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا […]

Next Page » « Previous Page