Author: Trichy Farook

“இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி

“இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’ இதுதான் அதனுடைய பொருளாகும். நம்முடைய உயிர்களானாலும், உடைமைகளானாலும் எதுவும் நமக்குச் சொந்தமில்லை. அவற்றைத் தந்த அந்த இறைவனுக்கே சொந்தம். இவை நம்மிடத்தில் இரவலாக இருக்கின்றன. அவற்றை அவன் எப்போது […]

ஜும்ஆ உரையில்  மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில்  மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (1015) […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-2

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் பகல் நேர தொழுகை கால்நடைகளா? நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். ஒற்றைப்படையில் ருகூவு, ஸஜ்தா தஸ்பீஹ்கள்? கமர்ஷியல் பத்திரிக்கைகளை […]

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே.! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத் தர வேண்டுமென நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகளும் மார்க்கத்தில் […]

வட்டியை ஒழித்த வான்மறை

வட்டியை ஒழித்த வான்மறை வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர். வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டியால் மக்களை வாட்டி வதைக்கின்றனர். சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறிக் கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு […]

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD?

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD? இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். கடன் அட்டைகளை தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு முன்பே பணத்தை கடன் அட்டைகளை […]

கடனில் இருந்து விடுபட (பலவீனமான துஆ)

கடனில் இருந்து விடுபட 1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக்கடனை அல்லாஹ் நீக்குவான் என்று கூறிவிட்டு, […]

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா?

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா? ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை 9 & 10 அல்லது 10 & 11 வது நாளிலும் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் […]

ஆஷூரா நோன்பு பற்றிய பலவீனமான ஹதீஸ்

ஆஷூரா நோன்பு பற்றிய பலகீனமான ஹதீஸ் ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (அஹ்மத்: 2047), பைஹகீ இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும்  இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர்  மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். […]

பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

பெண்ணுரிமை பேணிய புனித வேதம் இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை. சம்பாதிக்கும் உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பிடிக்காத கணவனை […]

தீவிரவாதத்திற்கு எதிரான திருக்குர்ஆன்

தீவிரவாதத்திற்கு எதிரான திருக்குர்ஆன் உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறை. தனிமனிதர்களின் […]

மாமறை செயல்படுத்திய மதுவிலக்குத் திட்டம்

மாமறை செயல்படுத்திய  மதுவிலக்குத் திட்டம் மனிதனின் அறிவுக்குத் திரை போட்டு, பாவமான காரியங்களில் ஈடுபடச் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது மதுவாகும். இந்த மதுப் பழக்கம் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர் பொருளாதாரத்தை இழக்கிறார்கள். சிலர் குடும்பத்தை இழக்கிறார்கள். சிலர் கற்பை இழக்கிறார்கள். சிலர் இவையனைத்தையும் இழக்கிறார்கள். சிலர் உயிரை இழக்கின்றார்கள். இந்த மோசமான பழக்கத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க, பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மதுப் […]

ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது

ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது 3712 حَدَّثَنَا يَزِيدُ ، أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ ، حَدَّثَنَا *أَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ* ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا أَصَابَ أَحَدًا قَطُّ هَمٌّ، وَلَا حَزَنٌ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، […]

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை கடவுளின் இலக்கணம் கடவுளே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பது நாத்திகக் கொள்கையாகும். உலகில் இது ஏற்பாரும் ஏறிட்டுப் பார்ப்பாரும் இல்லாத ஒரு நாதியற்றக் கொள்கையாகும். காரணம், எந்த ஒரு பொருளும் தான்தோன்றி கிடையாது. உதாரணத்திற்கு மனிதன் மணி பார்ப்பதற்காகக் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை எடுத்துக் கொள்வோம். இது தானாகத் தோன்றியது என்றால் கிராமத்தில் வாழ்கின்ற, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரன் கூட அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிப்பான். அப்படியிருக்கும் […]

தீண்குலப் பெண்களின் பண்புகள்-2

தீண்குலப் பெண்களின் பண்புகள்-2 திருமணத்திற்கு பின்:- நபியவர்கள் திருமணம் என்பது எனது வழிமுறை என்று கூறியுள்ளார்கள், பெண்களாகிய நாம் பலவருடங்கள் நம்முடைய பெற்றோர் உறவினர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்திருப்போம், இடையில் ஒரு புதிய சொந்தத்தை அல்லாஹ் நம்மோடு இணைத்து வைக்கிறான். அது தான் கணவன் என்கிற உறவு, பல வருடம் நாம் நமது பெற்றோர்களோடு இருந்து வந்தோம் அதனால் அவர்கள் மீது நமக்கு அன்பு வந்தது, ஆனால் இடையில் நம்மோடு இணையும் உறவு அவர்கள் மீது அளவுகடந்த […]

தீண்குலப் பெண்களின் பண்புகள்-1

தீண்குலப் பெண்களின் பண்புகள் முன்னுரை:- இவ்வுலகத்தை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமின் அதில் மனிதர்களை வாழ்வதற்கு படைத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முஹம்மது (ஸல்)  அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரத்தின் மூலமாக விளக்கியுள்ளான். நாம் வாழுகின்ற இவ்வுலகம் மிகவும் கவர்ச்சியாகவும்,உள்ளத்தை ஈர்க்கும் விதமாக இருந்தாலும், இவ்வுலக வாழ்க்கை நிரந்தமற்றது என்கிற ஒன்றை மட்டும் நாம் எப்போதும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ […]

தீண்டாமையைத் தகர்த்த இறைவேதம்

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன் சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன. சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம். இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல […]

ஜோதிடம் பொய்யே!

ஜோதிடம் பொய்யே! மூட நம்பிக்கையை முறியடித்த மாமறைக் குர்ஆன் உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று ஜோதிடம் ஆகும். நட்சத்திர ஜோசியம், எண் ஜோசியம், கிளி ஜோசியம், நாடி ஜோசியம், கைரேகை ஜோசியம் என்று பல்வேறு வகையிலான ஜோதிடக் கலைகள் மக்களுக்கு மத்தியில் உலவிவருகின்றன. நம்முடைய எதிர்காலத்தையும் மறைவான விஷயங்களையும் ஜோதிடர் கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை நம்பி தங்களுடைய எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற இயலாது. […]

சுயமரியாதை போதித்த பகுத்தறிவு மார்க்கம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பரவச் செய்திருக்கின்றான். இந்த உலகத்தில் ஏராளமான உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவு என்ற சிந்தனை அறிவு மனிதர்களைத் தவிர வேறு எந்தப் படைப்புக்கும் வழங்கப்படவில்லை. மேலும், மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் […]

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று ஊடகங்களின் இருபத்து நான்கு மணி நேர சேவையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்ற அலைவரிசைகளில் மக்கள் கவனத்தை அதிகம் கவர்ந்திழுப்பவை நகைச்சுவைக் காட்சிகள் தான். அந்த அளவுக்கு மக்கள் தங்களை மறந்து சிரிப்பில் மூழ்கிக்கிடப்பதை பார்க்கின்றோம். உயர் தரமிக்க உலக இலக்கிய நூல்கள், உன்னதமான காவியங்கள் எல்லாம் சிரிப்புக்கு […]

அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல! ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்!

அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல! ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்! இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர்கின்றான். அந்த அளவுக்குக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தலைவிரித்தாடுகின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் கற்புக்கு அறவே பாதுகாப்பில்லை. கன்னிப்பெண், கல்யாணம் முடித்த பெண் என்ற வரம்பு எல்லைகளைத் தாண்டி, பருவமடையாத, பால் முகம் மாறாத சின்னஞ்சிறுமிகளும் காட்டுமிராண்டிகளின் காமப்பசிக்கு இரையாகின்றனர். பறந்து திரியும் பருந்துகளின் பாலியல் […]

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு?

வசதிக்கேற்ப விழாக்கள் நடத்துவதில் என்ன தவறு? பதில் : மார்க்கம் அனுமதித்துள்ள விழாக்கள் இரண்டு பெருநாட்கள் மட்டுமே. இது தவிர வீடு குடியேறுதல், திருமணம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அகீகா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு விருந்தளித்து மகிழ அனுமதி உண்டு. இவை அல்லாமல் பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள், சுன்னத் செய்தல் என பல விழாக்களை முஸ்லிம்கள் தாமாக உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இவ்விழாக்கள் சமுதாயத்துக்குத் தெரியாமல் நான்கு சுவற்றுக்குள் நடத்தப்படுகின்றவை அல்ல. வீட்டு […]

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா? உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர். இந்த உண்மையை முஸ்லிம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர். […]

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும். பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற […]

09) புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள்

புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள் புகாரி இமாமின் மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்பவரிடமிருந்து பல மாணவர்கள் புகாரி நூலைப் பிரதி எடுத்துள்ளனர். அவர்களில் பின்வரும் மாணவர்கள் முக்கியமானவர்கள். இப்ராஹீம் பின் அஹ்மத் அல்முஸ்தம்லீ அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்ஹமவீ முஹம்மத் பின் மக்கீ குஷ்மீஹனீ அபூ அலீ அஷ்ஷப்பூவீ இப்னு ஸகன் அல் பஸ்ஸார் அபூ ஸைத் அல்மரூஸீ அபூஅஹ்மத் அல்ஜுர்ஜானீ இவர்களிடம் இருந்த பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும் வாசக […]

சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்!

சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்! இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை. இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை. மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை. அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை. அதே நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகின்ற விருந்து வைபவங்களில் கலந்து கொள்வதில்லை. நபி பிறந்த தின விழா, நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளிலும் சேர்வதில்லை. கந்தூரிகள், கருமாதிகள் என்று எதிலும் இணைவதில்லை. […]

சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

வெட்டுக்கிளி பற்றிய ஹதீஸ்

வெட்டுக்கிளி பற்றிய ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُلاَثَةَ ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ ، […]

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!- 2

தொடர் – 2 அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம். இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி அறிந்துகொள்வோம். நாயனுக்கு நன்றி செலுத்த அல்ஹம்துலில்லாஹ் கூறுவோம் நாம் இக்கட்டான சூழலில் துவண்டு கிடக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் உதவும் பொழுதோ, அல்லது ஒருவரின் உதவிக்காக அவரிடம் தேடிச் […]

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் பப்ஜி

இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்ஃபோன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றது. இதுபோன்ற கேம்கள், கார்ட்டூன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்! […]

கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள்

சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம், அவற்றை முழுமையாக கற்பனை கூட செய்ய இயலாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்! ஈமானுடன் நல்அமல்களும் அவசியம்! الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29) وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ […]

மங்கையர் நலன் நாடும் மாமறை

மங்கையர் நலன் நாடும் மாமறை சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன. இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட […]

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன்

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன் இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை இறைவன் அனுப்பும் போது, சில அற்புதங்களையும் இறைவன் கொடுத்தனுப்பியிருக்கின்றான். அப்படிப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருளை அருட்கொடையாக, அற்புதமாகக் கொடுத்து, உலகம் அழிகின்ற […]

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான். கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி […]

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன்

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன் மனித சமுதாயம் நேரான வழியில் செல்வதற்காக அல்லாஹ் இறுதித் தூதராக முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்கு அல்குர்ஆன் என்ற இறைவேதத்தையும், ஏனைய மார்க்க ஞானங்களையும் இறைவன் வழங்கி அதனையே உலகம் அழியும் வரை தோன்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் எனும் மார்க்கமாகவும் ஆக்கினான். ஆனால் இறைவனின் நேர்வழியை மனித சமுதாயத்திற்குப் போதித்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, எவர்களின் சொற்களும், செயல்களும் மார்க்க ஆதாரமாகக் […]

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா?

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா? அல்குர்ஆன் அளிக்கும் அழகிய விளக்கம் அதிகமான முஸ்லிம்கள் அவ்லியாக்கள் மீது அதீதமான, அலாதியான பற்றும் பாசமும் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் நினைவாகப் பள்ளிவாசல்களை மிஞ்சும் அளவுக்கு வானளாவிய மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றிற்காகக் கந்தூரிகள், சந்தனகூடுகள், கொடியேற்றங்கள் போன்றவை ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. அவர்களின் பெயரால் மீலாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மவ்லிதுகள் ஓதப்படுகின்றன. அந்த மவ்லிதுக்காக புலவுச் சோறு சமைக்கப்பட்டு புனிதம், புண்ணியம் என்ற பெயரில் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் இப்படிக் […]

அல்லாஹ்வா? அவ்லியாவா?

அல்லாஹ்வா? அவ்லியாவா? குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை எல்லாம் வல்ல அல்லாஹ், அன்றைய மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு ஒரே ஒரு ஏக நாயனை மட்டும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான். وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன்: 98:5) […]

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன்

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன் குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது. குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள். ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக வாய்க்கப்பட்டும் கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நன்மை ஓடையைத் தாங்களே அணை […]

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம்

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம் திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது. அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கடவுள் கொள்கை உலகத்தைப் படைத்து, இயக்கிக் கொண்டிருப்பவன் ஏக இறைவனான ஒரே கடவுள் தான். அவனுக்கு நிகராக, இணையாக யாருமில்லை என்பது தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும். உலகத்திலேயே பாமரன் முதல் பண்டிதன் வரை அத்தனை ரக மக்களும் […]

பொய்யர்கள் அழிவார்கள்!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்கள் செய்கின்ற செயல்களில் நன்மையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? தீமையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? என்பதை ஏராளமான உபதேசங்களின் மூலமாக மிகவும் விரிவாகவும், எளிமையான முறையிலும் அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது. நாம் செய்யக்கூடிய கேடுகெட்ட காரியங்களைப் பொறுத்தே இம்மையிலும், மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்று […]

தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா?

தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா? ஏகத்துவ அடிப்படையில் அமைந்த ஐவேளை தொழுகைக்கான பள்ளிவாசல்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த பள்ளிவாசல்கள் வெறுமனே ஐவேளைத் தொழுகைகளுக்கான ஸ்தலாமாக மட்டுமிராமல் அழைப்புப் பணி, சமுதாயப் பணி என்று பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும் மையங்களாகவும் இருக்கிறது. அந்த பணிகள் தொடர்பான அறிவிப்புகள் மக்கள் ஒன்றினையும் நேராமான தொழுகை நேரத்தில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் பல இடங்களில் செய்யப்படுகிறது. இவ்வாறு தொழுகை முடிந்ததும் அறிவிப்பு செய்தல் என்பது […]

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! கனிவும் மாண்பும் மிகுந்த ஏக இறைவன், படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக மனித குலத்தைத் தேர்வு செய்திருக்கிறான். எந்த உயிரினத்திற்கும் வழங்காத பகுத்தறிவை மனித இனத்திற்கு வழங்கி, எதுவெல்லாம் நன்மை, எதுவெல்லாம் தீமை என்பதை பிரித்துக் காட்டியுள்ளான். நன்மை செய்தால் கிடைக்கும் வெகுமதியைப் பற்றியும், தீமை செய்வதால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? […]

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி? ஷியாக்களின் புரட்டு வாதம் உலகில் ஷியாக்கள் அல்லாத முஸ்லிம்களில் உள்ள அனைத்து பிரிவினரும் குர்ஆன் எள்ளளவு  மாற்றத்திற்கும் இம்மியளவு  திருத்ததிற்கும் அறவே  உள்ளாகவில்லை என்று ஆணித்தரமான நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஷியாக்கள் மட்டும் இதற்கு நேர்மாற்றமான கருத்தில் இருக்கின்றனர். இதுவரை நாம் கண்ட அல்காஃபி என்ற நூலில் கலீனீ அறிவிக்கின்ற இரண்டு அறிவிப்புகளும் தற்போது இருப்பதைப் போன்ற குர்ஆனின் மூன்று மடங்கு வசனங்கள் காணாமல் போய்விட்டன […]

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

அல்லாஹ்வின் தூதரே  அழகிய ஆசிரியர்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது. عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ […]

08) நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, […]

பொறுப்பு – ஓர் அமானிதம்

பொறுப்பு – ஓர் அமானிதம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம். […]

கொலையை விட குழப்பம் கொடியது!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் சரியானதையும் தவறானதையும் பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பங்கள் ஏற்படலாம்; அதனால் மக்களைத் தடுமாற்றமும் பதட்டமும் பற்றிப் பிடித்துக் கொள்ளும். இத்தகைய சூழ்நிலை பற்றியும் அப்போது கையாள வேண்டிய முறை பற்றியும் இஸ்லாம் விளக்கியுள்ளது. […]

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் அன்பளிப்பு வாங்குவதும், வழங்குவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து ஒரு கலாச்சாரமாகும். நமது வீட்டில் நடைபெறுகின்ற மார்க்கம் அனுமதித்த, மார்க்கம் அனுமதிக்காத விஷேசங்களில், குழந்தை பிறப்பு முதற்கொண்டு, திருமணம், பெயர் சூட்டுவிழா, புதுமனை புகுவிழா என அனைத்து விதமான காரியங்களிலும் அன்பளிப்பு […]

கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

கதை வடிவில் மார்க்கம் அறிவோம் “கண்டதைப் படி பண்டிதனாவாய்” என்பது பன்னெடுங்காலமாகத் தமிழில் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளில் ஒன்றாகும். மார்க்கத்துக்கு முரணில்லாத நல்லவற்றில் இதை வாசிப்பேன், அதை வாசிக்க மாட்டேன் என்று எந்த ஒதுக்குதலும் இல்லாமல் வாசிக்கின்றவன் நிச்சயம் கற்றுத்தேர்ந்த கல்விமானாக உருவாவான் என்பது நிதர்சனமான உண்மையும் கூட. ஆனால், இன்றைய தலைமுறையினரின் நவீன வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. தான் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை ஒருவன் வாசிக்கின்ற போது கூட […]

Next Page » « Previous Page