Tamil Bayan Points

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on September 16, 2020 by

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா?

நோன்பு வைத்துவிட்டு உறங்கும்போது தன்னை அறியாமல் தூக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முடிந்து விடுமா அப்படி வெளியேறும் போது குளிப்பு அவர் மீது கடமையாகிறதா?

பதில்:

உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியும் என்பதற்கு ஆதாரம் இல்லாததால் முறிக்காது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று அல்லாஹ் எவற்றைக் குறிப்பிட்டானோ, அவனது தூதர் எவற்றைக் குறிப்பிட்டார்களோ அந்தப் பட்டியலில் இல்லாத எதுவும் நோன்பை முறிக்காது. நோன்பு வைத்துக் கொண்டு கணவன் மனைவியர் உடலுறவில் ஏற்பட்டால் நோன்பு முறியும் என்பதற்கு ஆதாரம் உள்ளது. நம்மை அறியாமல் நம் முயற்சி இல்லாமல் விந்து வெளிப்படுவது இதில் அடங்காது.