Author: Trichy Farook

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு […]

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே! வஸீலா என்றால் என்ன? எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும். அதாவது தமிழில் “துணைச் சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று கூறுவர். நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!

இணைவைப்பே தீமைகளின் தாய்! ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை. இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் […]

நாளைய ஞானம் நபிக்கு உண்டா?

நாளைய ஞானம் நபிக்கு உண்டா? வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! அவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்பு, ஆகிய எந்த ஒன்றிலும் அணுவளவும் கூட்டு இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை சங்கநாத முழக்கமாகும். இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை நியமித்தான். நமக்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் எந்த மக்களைச் சீர் செய்ய வந்தார்களோ, எந்தக் கடவுள் […]

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு லா இலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும். இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர். குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது. “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகி […]

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்-2

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்-2 இணை கற்பித்தல் என்றால் ஏன்ன? நாம் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர் மறையான இணை வைத்தல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்துமே இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் […]

ஜோதிடமும் சூனியமும்

ஜோதிடமும் சூனியமும் அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும். அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது […]

உணரப்படாத தீமைகள்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனாகிய அல்லாஹ் தனக்கு இணைகள், துணைகள் எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இணை இருப்பது ஒரு கடவுளுக்குத் தகுதியானதல்ல என்பதையும் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான். இதையும் மீறி அல்லாஹ்விற்கு இணையானவர்கள் உண்டு என்று யாராவது நம்பினால் அதற்கு மறுமையில் மிகப் பெரிய தண்டனை காத்திருக்கின்றது என்றும் இறைவன் […]

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இணையில்லா இறைவனுக்கு இணை கற்பிப்பது மன்னிக்கப்படாத குற்றம் நன்மைகளை நாசமாக்கும் நச்சுக் காரியம் நிரந்தர நரகில் தள்ளும் நிகரில்லாப் பாவம் மனிதன், இறைவனுக்கு இழைக்கின்ற மகத்தான அநீதி அத்தகைய இணைவைப்பைச் செய்வதால் ஏற்படும் இம்மை, மறுமை இழப்புகளை, இணைவைப்பின் விபரீதங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் நிறையவே கூறியுள்ளான். அந்த வரிசையில் […]

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம் இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் […]

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்தது விடுமா?

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா? இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்புகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நபி [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்படுவதைப் போல, […]

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து […]

ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா?

ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? இமாம் ஜுமுஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். அந்தச் செய்திகள் ஸஹீஹானவை தானா? அல்லது பலவீனமானவையா? என்பதைப் பற்றி நாம் […]

செத்த பிராணிகள் குறித்த சட்டம்

செத்த பிராணிகள் குறித்த சட்டம் விலக்கப்பட்ட உணவுகளில் தாமாகச் செத்தவை இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. தாமாகச் செத்தவைகளை உண்ணக்கூடாது என்றால் அடித்தோ, கழுத்தை நெறித்தோ, வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது. தாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் அடிப்பட்டுச் செத்ததும், கீழே விழுந்து […]

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். பதில் : நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை. இஸ்லாமிய நம்பிக்கையின் […]

நாய் வளர்க்கலாமா?

நாய் வளர்க்கலாமா? வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ […]

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள்

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள் அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன்: 5:4)➚ இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். […]

கினி பன்றிகள் வளர்க்கலாமா?

கினி பன்றிகள் வளர்க்கலாமா? கேள்வி : கினி பன்றிகள் தோற்றத்தில் முயல் போன்றும், எலி போன்றும் உள்ளது. இந்தப் பிராணியை செல்லப் பிராணியாக வளர்ப்பது கூடுமா? பதில் : இந்தப் பிராணி பன்றியைப் போன்று பெரிய தலை தடித்த கழுத்து வட்டமான பின்பகுதி ஆகியவற்றைப் பெற்றுள்ளதால் இதில் பன்றியின் சாயல் தென்படும். மேலும் இது எழுப்பும் சப்தம் பன்றியின் சப்தத்தைப் போன்று அமைந்துள்ளது. முயலுடைய சாயலும் இந்தப் பிராணியில் தெரியும். ஆனால் உண்மையில் இது பன்றி இனத்தைச் […]

மாஷிதா என்ற பெண்ணின் கதை உண்மையா?

மாஷிதா என்ற பெண்ணின் கதை உண்மையா? கேள்வி: கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள். […]

அபூபக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸ் நிலை?

அபூபக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸ் நிலை? எனக்குப் பின் அபூ பக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்களா? பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமாக உள்ளன. ஹுதைபா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், திர்மிதீ, பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதை ரிப்யீ பின் கிராஷ் என்பார் வழியாக அப்துல் மலிக் பின் […]

மஹ்தி தான் ஈஸா என்று ஹதீஸ் உள்ளதா?

மஹ்தி தான் ஈஸா என்று ஹதீஸ் உள்ளதா? மஹ்தி என்பவர் ஈஸா பின் மர்யம் தான் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. லல் மஹ்திய்யு இல்லா ஈஸா என்ற இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமானதாகும். இட்டுக்கட்டப்பட்டதாகும். سنن ابن ماجه 4039 – حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ الْحَسَنِ عَنْ أَنَسِ […]

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா? பதில் இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பொய்யர்களால் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். تاريخ أصبهان = أخبار أصبهان (1/ 194) 240 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الضَّرِيرُ الْخَبَّازُ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، ثنا عَمْرُو بْنُ جُمَيْعٍ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ […]

இரவில் உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வருமா?

இரவில் உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வருமா? இரவு உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வரும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. 3355 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ السَّلَامِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – […]

மனிதர்களின் பாவத்தினால் ஹஜருல் அஸ்வத் கருத்துவிட்டதா?

மனிதர்களின் பாவத்தினால் ஹஜருல் அஸ்வத் கருத்துவிட்டதா? ஆதமின் மக்களின் பாவத்தினால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது என்று கூறுகின்றார்களே இது சரியா? 803حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنْ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ قَالَ وَفِي الْبَاب […]

சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள்

சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள் யார் 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி) (திர்மிதீ: 415) ➚,(நஸாயீ: 1801, 1802, 1803) ➚, குப்ரா(நஸாயீ: 1477) ➚, […]

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா? சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். நாம் செய்ய நினைக்கின்ற இரண்டு காரியங்களில் எதைச் செய்யலாம் என்று குழப்பம் வரும் போது அதில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுதல் மற்றொரு வகை. […]

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா?

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா? இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதில் மனிதர்களைப் பரவச் செய்திருக்கின்றான். இறைவன் படைத்த கோடான கோடி மக்களில் ஒரு சில குறிப்பிட்ட சாராரை மாத்திரம் தேர்வு செய்து இஸ்லாம் என்னும் மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நம்மில் பெரும்பாலானோர் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்ததன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் முன்னோர்கள், கட்டுக்கதைகள், மார்க்கத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத […]

கொஞ்சி விளையாடி…

கொஞ்சி விளையாடி… சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது. வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம். நியாயத்தைப் பேசும்போது […]

இறுதி முடிவு இனிதாகட்டும்!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம்முடைய அமல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துச் செயல்படும் போது மட்டுமே மறுமையில் முழுமையான வெற்றிபெற முடியும். ஆகையால், அது தொடர்பான ஒரு முக்கிய போதனையை இப்போது இந்த உரையில் அறிந்துக்கொள்வோம். செயல்களின் முடிவு இறுதியே பொதுவாக மார்க்க […]

முகஸ்துதி ஒரு புற்று நோய்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களுடைய மறுமை வாழ்வின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதற்கான பரீட்சைக் கூடமே இவ்வுலக வாழ்க்கை.. இவ்வுலகில் இறைவன் வகுத்துத் தந்த வழியில் செயல்பட்டு அவன் சொன்ன நற்காரியங்களைப் புரிந்து நன்மைகளை அவர்கள் சேகரிக்க வேண்டும். அவர்கள் சேகரிக்கும் நன்மையினால் கிடைக்கப் பெறும் இறையருளால் மட்டுமே வெற்றிக்கனியான சுவனத்தைப் பெற இயலும். அத்தகைய நன்மையான […]

பறவைகளின் பல மைல் பயணம்

பறவைகளின் பல மைல் பயணம் படைத்த நாயனின் ஓர் அற்புதம் 67:19➚ اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏ அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 67:19)➚ 16:79➚ اَلَمْ يَرَوْا […]

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?

வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? கேள்வி: வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும். வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும் நாம் பங்கு பெறுதல் வராது. வங்கியில் தூய்மைப் பணிகளில் ஈடுபடக் கூடியவர், டீ காபி செய்து கொடுப்பவர் போன்ற பணிகளில் ஈடுபடலாம்; வட்டிக்கு கணக்கு எழுதக் கூடியவர்களாக, வட்டிக்கு சாட்சி சொல்லக்கூடிய பணிகளில் ஈடுபடக்கூடாது என்பது நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக […]

முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று மக்கள் தங்களுடைய தலைவர்களாக சிலரை ஏற்படுத்தி, அவர்கள் சொல்லும் கருத்திற்கேற்பத் தான் நாங்கள் செயல்படுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் உத்தமத் தூதர் நபிகள் நாயகத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுவது போல் உலகில் எந்தச் சமூகமும் எந்தத் தலைவருக்கும் கட்டுப்படவில்லை என்று அறைகூவலாகக் கூட […]

குர்ஆனைப் பார்ப்பது வணக்கமா?

குர்ஆனைப் பார்ப்பது வணக்கமா? اللآلي المصنوعة – (1 / 317) وقال أنبأنا القاضي سوار بن أحمد حدثنا علي بن أحمد النوفلي حدثنا محمد بن زكريا بن دينار حدثنا العباس بن بكار حدثنا عباد بن كثير عن ابن الزبير عن جابر مرفوعا النظر في المصحف عبادة ونظر الولد إلى الوالدين عبادة والنظر إلى علي بن أبي طالب […]

வட்டிக்கு தீர்வு இஸ்லாம் மட்டுமே!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இதற்கு நிரந்தரத் தீர்வு எங்கே கிடைக்கும்? திருக்குர்ஆனில் மட்டும் தான் இதற்குத் தீர்வு கிடைக்கும். திருக்குர்ஆனை அரசியல் மற்றும் ஆன்மீக சாசனமாகக் கொண்ட இஸ்லாத்தில் மட்டும் அதற்குத் தீர்வு இருக்கின்றது. முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த […]

கந்துவட்டி கொடுமை!

கந்துவட்டி கொடுமை! கருகிய உயிர்கள் உருகிய உள்ளங்கள் 2017 அக்டோபர் 23ஆம் தேதி அன்று தென்காசி காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர், தங்களது குழந்தைகள் நான்கு வயது மதுசரண்யா, இரண்டு வயதைக்கூட எட்டிப் பிடிக்காத பால்குடி மாறாத பதினெட்டு மாத அட்சய பரணிகா ஆகிய இருவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்க வந்தனர். மனுக் கொடுக்க வந்தவர்கள் தங்கள் மீதும் கள்ளம் கபடமறியாத தங்களது பிஞ்சுக் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்தனர். […]

மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள்

மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள் நபித்தோழர்களில் பலருக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விஷயங்களில் பல செய்திகள் தெரியாமல் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் வியாபார ரீதியில் பொருளாதாரத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டதும், பலர் ஆரம்ப காலத்திலேயே இறந்ததும், பலர் பிற்காலத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றதும், மக்காவில் வைத்து நடந்த சம்பவங்கள் மதீனாவில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போனதும், சம்பவ இடத்தில் நபித்தோழர்கள் இல்லாமல் போவதும், செய்தியின் சாராம்சத்தை விளங்காமல் வேறொரு அர்த்தத்தில் புரிவதும், அவர்களின் வீடு மஸ்ஜிதுன் நபவியை விட்டும் […]

பெற்ற மகள்கள் என்றும் பாராமல் நரபலி கொடுத்த பெற்றோர்

பெற்ற மகள்கள் என்றும் பாராமல், நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம் திருப்பதி: ஆந்திராவில் மூட நம்பிக்கையின் உச்சம் என்று சொல்வதா அல்லது கொடூரத்தின் உச்சம் என்று சொல்வதா என்று தெரியவில்லை, ஏனெனில் தாங்கள் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்துள்ளது. இந்த கொடூரத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதனை இன்னும் சில உணர […]

02) நாஸிக் மன்ஸூக் ஏன்? எதற்கு?

ஹதீஸ் கலை துறையிலும், உசூலுல் ஃபிக்ஹ் எனும் சட்டக் கலைத் துறையிலும் நாஸிக், மன்ஸூக் என்பது பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். ‘‘நாஸிக்” ‘‘மன்ஸுக்” என்ற சொற்கள் ‘‘நஸக” என்ற மூலச் சொல்லிருந்து தோன்றியவையாகும். ‘‘நஸக” என்ற அரபி வார்த்தைக்கு ‘‘நீக்குதல்” ‘‘பிரதியெடுத்தல்” என்று பொருளாகும். ‘‘இறைவனால் முதலில் விதியாக்கப்பட்ட ஒரு மார்க்கச் சட்டம் இறுதியாக விதியாக்கப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம் மாற்றப்படுவதை” இஸ்லாமிய சட்டக் கலைத் துறையில் ‘‘நஸ்க்” என்று கூறப்படும். மாற்றப்பட்ட முந்தைய […]

காகத்தை உண்ணுவது சம்மந்தமாக வரும் செய்தி

காகத்தை உண்ணுவது சம்மந்தமாக வரும் செய்தி سنن البيهقي الكبرى (9/ 317) 19153 – وأخبرنا أبو عبد الله الحافظ أنبا عبد الله بن جعفر بن درستويه الفارسي ثنا يعقوب بن سفيان الفارسي ثنا إسماعيل بن أبي أويس حدثني أبي عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن وعن هشام بن عروة عن عروة عن عائشة رضي […]

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல், பொதுநல சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மைச் சுற்றியிருக்கும் […]

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக பிற மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் […]

இரைக்குப் பொறுப்பு இறைவனே!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அன்றாடம் தமது தேவைகளை அடைவதற்காக காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்கின்ற வரை தமது வியர்வைத் துளிகளை இரத்தத் துளிகளாக்கி அயராது உழைத்துப் பாடுபடுகின்றனர். எந்த அளவிற்கென்றால் சில நேரங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையை […]

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்! நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச் சீர்கேடுகளும் தான் என்று நாம் மறுமொழி பகர்கிறோம். சில தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் ஹைதர் என்பவரது மகள் ருக்ஸானா (வயது 21) […]

மாமியார் மருமகள் உறவு

மாமியார் மருமகள் உறவு இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ […]

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? அறியாமைக் காலம் தொடங்கி திருக்குர்ஆன் அருளப்படும் காலகட்டம் வரை பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கம் இஸ்லாத்தை ஏற்காத அரபிய மக்களிடையே இருந்து வந்தது. வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தையை இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் திருத்தியது. وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏ வறுமைக்கு அஞ்சி […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-6

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். முஸ்லிம்கள் தீர்மானிப்பது நல்லதாகுமா? الهداية شرح البداية قال عليه الصلاة والسلام […]

ஆஷுரா தரும் படிப்பினைகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு ஆஷுரா நோன்பு எனப்படும். இந்த ஆஷுரா நோன்பை பற்றி குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள செய்திளை இந்த உரையில் காண்போம். ஆஷுரா நோன்பு […]

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடின்றி, மரணத்தைச் சந்திக்கின்ற வரை செல்வத்தில் ஒரு தேடல் இருந்து கொண்டே […]

அற்ப விஷயத்தையும் பின்பற்றிய  அண்ணலாரின் தோழர்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ […]

Next Page » « Previous Page