
கொலை கொடியது இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது; வாளால் தனது சித்தாந்தங்களைப் பரப்புகின்றது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும். இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற இவர்களது முடிவு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனையோ, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையோ ஆழமாக வாசித்து எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, போர் குறித்துக் குர்ஆன் கூறும் வசனங்களை அவசர கோலத்துடன் படித்து எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இது. (போர் நெறிமுறைகள் குறித்து […]