Tamil Bayan Points

யாஸீன் மற்றும் துஃகான் அத்தியாயம் குறித்த செய்திகள்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on July 28, 2021 by

யாஸீன் மற்றும் துஃகான் அத்தியாயம் குறித்த செய்திகள் 
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَخْلَدٍ الْوَاسِطِيُّ الْبَزَّازُ قَالَ: نا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: نا أَغْلَبُ بْنُ تَمِيمٍ، عَنْ جَسْرٍ أَبِي جَعْفَرٍ، عَنْ غَالِبٍ الْقَطَّانِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ يَاسِينَ فِي يَوْمٍ وَلَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

நூல்: திர்மிதி : 3509

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين الحسن البصري وأبو هريرة الدوسي ، وفيه أغلب بن تميم المسعودي وهو متروك الحديث]

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அக்லப் பின் தமீம் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்

துஃகான் (44 வது) அத்தியாயத்தின் சிறப்பு

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ حم الدُّخَانِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَعُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ يُضَعَّفُ قَالَ مُحَمَّدٌ: «وَهُوَ مُنْكَرُ الحَدِيثِ»

. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்

2888 நூல்: திர்மிதி

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இது (இட்டுக்கட்டப்பட்ட) பொய்யான செய்தி.

إسناد شديد الضعف فيه عمر بن عبد الله اليمامي وهو منكر الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . துகான்

பார்க்க : தாரிமீ-3463 , 3464 , திர்மிதீ-2888 , 2889 , முஸ்னத் அபீ யஃலா-6224 , 6232 , அல்முஃஜமுல் கபீர்-8026 , 

2 .  யாஸீன்

முஸ்னத் தயாலிஸீ-2589 , தாரிமீ-3458 , 3460 , முஸ்னத் அபீ யஃலா-6224 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3509 , அல்முஃஜமுஸ் ஸகீர்-417 , இப்னு ஹிப்பான்-2574 ,