15) தலாக் சட்ட சுருக்கம்
- ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தவுடனே தலாக் கூறாமல், இந்த 4 விஷயங்களை முதலில் கடைபிடிக்க வேண்டும்.
-
- அறிவுரை கூறி, திருத்த வேண்டும். முடியாவிட்டால் (அல்குர்ஆன்: 4:34) ➚
- படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி வைக்க வேண்டும். (அல்குர்ஆன்: 4:34) ➚
- முடியாவிட்டால், இலேசாக அடித்துத் திருத்துவது (விவாகரத்து வரை செல்லாமல் இருக்க)
- மனைவி திருந்தாவிட்டால், இரு குடும்பத்திலும் ஒரு நடுவரை ஏற்படுத்தி பேசி நல்லிணக்கம் ஏற்படுத்தவது. (அல்குர்ஆன்: 4:35) ➚
- கணவன் மனைவியருக்கிடையேயுள்ள பிணக்கு மேற் சொன்ன நாங்கு நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடருமானால் அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.
- ஜமாஅத்தார்கள் பேசி, அவர்களுக்கு மத்தியில் இணக்கம் வராவிட்டால், அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்:
- முதல் தடவை தலாக் கூறிய பின், சேர்த்து வாழ நினைத்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
- இரண்டாம் தடவை தாலாக் கூறிய பின், சமாதானம் ஆகி சேர வாழ நினைத்தால், சேர்த்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்: 2:229) ➚
- மூன்றாம் தடவை தலாக் கூறிய பின், இது கடைசி வாய்ப்பு அந்த நிமிடமே திருமண உறவு நிரந்தரமாக நீங்கி விடும். மீண்டும் சேர்வதற்கு எந்தக் கெடுவும் இல்லை.
- மூன்று தடவை தலாக் கூறிய பின், ஒரு வேலை சேர்ந்து வாழலாம் என்று நினைத்தால், அவள் வேறு கணவனை மணம் முடித்து, அவர் தலாக் விட்டால், (மீண்டும் முதல் கணவனை திருமணத்தின் மூலம் மனந்து கொண்டு வாழலாம்.
- மறு திருமணம் செய்வதற்கு, மாதவிலக்கு அற்றுப் போனவர்கள் அல்லது மாதவிலக்கு ஏற்படாதவர்கள்.(மூன்று மாதங்கள் முடியும் வரை காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன்: 65:04) ➚
- மறு திருமணம் செய்வதற்கு, கர்ப்பிணியாக இருந்தால், பிரசவிகுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
- (அல்குர்ஆன்: 65:04) ➚
- கணவன் இறந்துவிட்டால், நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.
ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறுவது கூடாது. அவ்வாறு கூறினாலும் அது ‘ஒரு தலாக்காக’ மட்டுமே கணக்கிடப்படும்.