கலவரங்கள் + கொலைகள் = பாஜக
கலவரங்கள் + கொலைகள் = பாஜக
பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அமைதிப் பூங்காவான இந்தியாவில் ஏராளமான தாக்குதல்களும், கலவரங்களும், அத்துமீறல்களும் நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதத்தின் பெயராலும், பசு பாதுகாப்பின் பெயராலும் ஏராளமான அத்துமீறல்கள், கலவரங்கள், படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் புள்ளி விவரத்துடன் அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதாக ஹேட் கிரைம் வாட்ச் (பிகிஜிணி சிஸிமிவிணி கீகிஜிசிபி) என்ற அமைப்பு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
2018 டிசம்பர் 26ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின் அடிப்படையில் மத அடிப்படைவாதம் மூலம் 93 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 2018 ஆம் ஆண்டில் மட்டும் காவி கும்பலின் அட்டூழியத்தால் 30 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஹேட் கிரைம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பா.ஜ.க இந்துத்துவா சக்திகள் ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தில் 36000 கலவரங்களும், மத்திய பிரதேசத்தில் 32000 கலவரங்களும், சத்தீஸ்கரில் 12000 கலவரங்களும் மதத்தின் பெயரால் நடந்திருக்கின்றது என்ற ஒரு அதிர்ச்சிகரமான புள்ளி விபரத்தை சமர்ப்பித்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக மதக் கலவரங்களை தூண்டி விடுவதிலும், கலவரங்களின் ஈடுபடுவதிலும் முன்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? எந்த புள்ளி விபரங்களையும் வெளியிட்டிருக்கின்றது. அந்த வரிசையில் மதக்கலவரங்கள் செய்வதில் பா.ஜ.க வைச் சார்ந்த காவி முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தில் இருக்கின்றார். பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் கலவரம் செய்வதில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. பா.ஜ.க ஆட்சி செய்து வந்த குஜராத் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து எந்த மாதிரியான கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றிருக்கின்றது என்பது தொடர்பான புள்ளி விபரங்களையும் வெளியிட்டுள்ளது. 2013: பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட மதக்கலவரங்களால் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் செய்த வெறுப்பு அரசியல் காரணமாக 9 கலவரங்கள் 2 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
2014: மோடி ஆட்சிக்கு வந்தவுடன் காவி பயங்கரவாத கும்பலால் 18 கலவரங்கள் மற்றும் 4 படுகொலைகள் அரங்கேறியுள்ளன. 2015: 30 கலவரங்களும் 18 படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2016: 42 கலவரங்களும் 15 படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. 2017: 75 கலவரங்களும் 29 படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. 2018: 81 கலவரங்கள் மதத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
மேலும் மதத்தின் பெயரால் கலவரங்களில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2018 ஆம் ஆண்டு மட்டும் நடைபெற்ற 81 கலவரங்களில் 60% இஸ்லாமியர்களும், 14% கிறிஸ்தவர்களும் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றார்கள். மொத்தமாக இந்தியாவில் காவி கும்பல்களால் அரங்கேற்றப்பட்ட கலவரங்களில் 75% மத சிறுபான்மையின மக்களும், 25% இந்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
காவி கும்பல்கள் செய்த கலவரங்கள் எதற்காக? ஏன்? என்பது பற்றியான செய்திக் குறிப்பும் அந்த ஆய்வறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 27% கலவரங்கள் பசு பாதுகாப்பை முன்வைத்து நடத்தப்பட்டதாகவும், 14% அன்போடு பழகிக் கொண்டிருக்கும் மதங்களிடையே வெறுப்பை உண்டாக்குவதற்காகவும், 9% மத மாற்றத்தை எதிர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகவும் ஆய்வறிக்கை கூறுகின்றது. இதுபோன்ற செய்திகளும், புள்ளி விபரங்களும், ஆய்வறிக்கைகளும் நமக்கு சொல்லித் தருகின்ற பாடம் என்னவென்றால்,
நாட்டில் நிம்மதியைக் குழைத்து, அமைதியை நாசமாக்கி, பாசத்துடன் பழகிக் கொண்டிருக்கின்ற மக்களிடையே வெறுப்பை தூண்டுவது போன்ற பலதரப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றார்கள். பா.ஜ.க வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும்.
அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன்: 8:30) ➚
Source:unarvu(08/03/2019)