நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும்

ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களில் அதிகமானோர் சொகுசு சாமியார்கள். நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் நாடே பிரளயத்தில் சிக்கினாலும் அதுபற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாதவர்கள் இந்த சொகுசு சாமியார்கள். அந்த வகை கார்ப்பரேட் சாமியார்களில் பலர் பலவகையில் சர்ச்சையில் சிக்குவார்கள்.

பணமோசடி மற்றும் பாலியல் சர்ச்சைகளில் இந்த சொகுசு சாமியார்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டாலும் அதை மறைக்க ஏதாவது ஒன்றைச் செய்து மக்களை திசை மாற்றி விடும் வேலையைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த சொகுசு சாமியார்களில் குறிப்பிடத்தக்கவர் நித்யானந்தா.

கர்நாடக மாநிலம் பிடதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக பிரம்மாண்ட ஆஸ்ரமத்தில் வசிக்கிறார் நித்யானந்தா. சில வருடங்களுக்கு முன்பு இவரிடம் சீடராக இருந்த நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகியது. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தன் மீது எந்தக் குற்றமும் இல்லை என நித்யானந்தா வாதிட்டார்.

இந்த விவகாரத்தால் நித்யானந்தாவிற்கு மக்கள் மத்தியில் பெயர் கெட்டு ஆதரவு குறைந்து போனது. அதுமட்டுமின்றி நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து போனதாகவும் கூறப்படுகின்றது.அது மட்டுமின்றி நித்யானந்தா நடத்தும் கட்டண சொற்பொழிவுகளுக்கும் மக்கள் கூட்டம் குறைந்து போனது. இதனை சரி செய்ய ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார் நித்யானந்தா. அ

தாவது குண்டலினி யோகா என்ற யோகப்பயிற்சியின் மூலம் வானில் பறக்கப் போகிறேன் என விளம்பரம் செய்தார். ஒரு மனிதன் பறக்கிறானென்றால் அது அதிசயமான சம்பவம்தானே? எனவே அதை அனைத்து ஊடகங்களும் சென்று படம் பிடித்தன. ஆனால் கடைசிவரைக்கும் நித்யானந்தா பறக்கவே இல்லை, பறக்கப் போகிறேன் என்று சொல்லி ஏமாற்றியதால் மக்கள் மேலும் அதிருப்தி அடைந்தார்கள்.

நித்யானந்தாவின் ஏமாற்றுப் பேச்சை நம்பிய பத்திரிகையாளர்கள் நித்தியுடன் வாக்குவாதம் செய்தார்கள். இதன் காரணமாக நித்திக்கு கடும் சரிவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி வைரமுத்து பிரச்சினையில் நித்தியின் சீடர்கள் செய்த செந்தமிழ் அர்ச்சனையைக் கண்டு கொதித்தெழுந்த தமிழார்வலர்கள் நித்தி ஆசிரமத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக மீடியாக்களின் பார்வை முழுமையாக நித்யானந்தாவிடம் இருந்து விலகிப் போனது. இதனால் மக்களிடம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளவும் மீடியாக்களை தன் பக்கம் திருப்பவும் தற்போது ஒரு பொய்யை சொல்லத் துவங்கியுள்ளார் நித்தி.

ஆடு, மாடு, சிங்கம் போன்றவைகளை பேச வைக்க என்னால் முடியும் என்று புதிய கதையை கிளப்பி விட்டுள்ளார் நித்யானந்தா. தொண்டையில் இருக்கும் உள் உறுப்புகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சமமாக இருப்பதாகவும் விலங்குகளின் தொண்டையின் உள் பகுதியில் சில மாற்றங்கள் செய்தால் மாடு, சிங்கம், குரங்கு போன்றவைகளை பேச வைத்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அதற்கான மென் பொருளை உருவாக்கி வருவதாகவும் அது சோதனை முறையில் வெற்றியடைந்து விட்டதால் இன்னும் ஓராண்டில் மாடு மற்றும் குரங்குகளை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேச வைக்கப் போவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பறக்கப் போகிறேன் என ஏற்கனவே அண்டப்புளுகு புளுகிய நித்யானந்தா இப்போது விலங்குகளைப் பேச வைக்கப் போகிறேன் என ஆகாசப் புளுகு புளுகியுள்ளார் என்பதே உண்மை. பேமஸ் ஆவதற்காக எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றுவதே சாமியார்களுக்கு வேலையாகப் போய்விட்டது. 

Source : unarvu ( 28/09/18 )