பெருநாள் அன்று பிலால் (ரலி)யின் ஆடையில் நகைகளைப் போட்ட பெண்கள்
“தர்மம் செய்யுங்கள்” என்றார்கள் நபி (ஸல்); மெட்டியும் மோதிரமும் கழற்றி எறிந்தனர் பெண்கள்
شَهِدْتُ صَلَاةَ الْفِطْرِ مَعَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ يَخْطُبُ، قَالَ: فَنَزَلَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ، حَتَّى جَاءَ النِّسَاءَ، وَمَعَهُ بِلَالٌ، فَقَالَ: يَا أَيُّهَا النَّبِيُّ {إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللهِ شَيْئًا} [الممتحنة: 12]، فَتَلَا هَذِهِ الْآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا، ثُمَّ قَالَ: حِينَ فَرَغَ مِنْهَا «أَنْتُنَّ عَلَى ذَلِكِ؟» فَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ، لَمْ يُجِبْهُ غَيْرُهَا مِنْهُنَّ: نَعَمْ، يَا نَبِيَّ اللهِ لَا يُدْرَى حِينَئِذٍ مَنْ هِيَ، قَالَ: «فَتَصَدَّقْنَ»، فَبَسَطَ بِلَالٌ ثَوْبَهُ، ثُمَّ قَالَ: هَلُمَّ فِدًى لَكُنَّ أَبِي وَأُمِّي، فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ، وَالْخَوَاتِمَ فِي ثَوْبِ بِلَالٍ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தொழுகையில் பங்கேற்றுள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்; அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஆண்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் காண்பதைப் போன்று உள்ளது.
பிறகு அ(ங்கிருந்த ஆட)வர்களின் வரிசைகளை விலக்கிக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது “நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்” என்று தொடங்கும் (60:12➚ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு (பெண்களிடம்), “இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும் “ஆம்; இறைத்தூதரே!
(இருக்கிறோம்)” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. (பதிலளித்த) அந்தப் பெண்மணி யாரென்று அப்போது தெரியவில்லை. (உண்மையில் அறிவிப்பாளர் ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத்தான் அது தெரியவில்லை.) அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் “(பெண்களே) தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 1604) ➚
பெருநாள் தொழுகைக்குப் பின் பெண்கள் இருந்த பகுதிக்கும் சென்று வசனத்தை ஓதி, தர்மம் செய்யுமாறு கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள். பணப்பையோ காசோ கையில் இல்லை என்பது அந்தப் பெண்களுக்குத் தடையாக இருக்கவில்லை; அணிந்திருந்த மோதிரத்தையும் மெட்டியையும் அப்போதே கழற்றிக் கொடுத்தனர்.
வீடு சென்று திட்டமிட்டு எடுத்து வரும் தர்மத்தை மட்டுமே நாம் தர்மமாக நினைக்கிறோம். ஆனால், மனம் அசைந்த அந்த நொடியிலேயே கையில் இருப்பதைக் கொடுத்த அந்தப் பெண்களின் துரிதம்தான் உண்மையான தர்மத்தின் அடையாளம் என்பதை இச்சம்பவம் கற்பிக்கிறது.