பத்ருப் போரில் இறுதிமூச்சில் இருந்த அபூ ஜஹ்லிடம் சென்ற இப்னு மஸ்வூத் (ரலி)
“நீங்களே கொன்று விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டு விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… யாரும் உண்டா?”
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ: «مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ» فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَقَالَ: آنْتَ أَبَا جَهْلٍ؟ قَالَ ابْنُ عُلَيَّةَ، قَالَ سُلَيْمَانُ: هَكَذَا قَالَهَا أَنَسٌ، قَالَ : ” أَنْتَ أَبَا جَهْلٍ؟ قَالَ: وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ ” قَالَ سُلَيْمَانُ: أَوْ قَالَ: «قَتَلَهُ قَوْمُهُ» قَالَ: وَقَالَ أَبُو مِجْلَزٍ: «قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي»
அனஸ் (ரலி) அறிவித்தார். அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத் (ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), ‘அபூ ஜஹ்லே! நீயா?’ என்றும் கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்: இப்படித் தான் இந்த நிகழ்ச்சியினை (எனக்கு) அனஸ் (ரலி) அறிவித்தார்’ என்று சுலைமான் இப்னு தர்கான் (ரஹ்) கூறினார்கள்.
மேலும், ‘இப்னு மஸ்வூத் அவர்கள் (அபூ ஜஹ்லை நோக்கி), ‘அபூ ஜஹ்லே நீயா?’ என்று கேட்டபோது, ‘நீங்களே கொன்று விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டு விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.. யாரும் உண்டா?’ என்று (தன்னத்தானே புகழ்ந்தவனாக) அபூ ஜஹ்ல் சொன்னான்’ என சுலைமான் (ரஹ்) அறிவித்தார். அபூ மிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்… (நன்றாயிருந்திருக்குமே!)’ என்று அபூ ஜஹ்ல் கூறினான் என இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் – (புகாரி: 4020) ➚
இறுதி மூச்சில் இருந்தும் அபூ ஜஹ்ல் மனந்திரும்பவோ பணியவோ இல்லை; தன்னை வீழ்த்தியவர் யார் என்ற பெருமையிலேயே அவன் இறுதி வரை மூழ்கியிருந்தான். ஆணவம் ஒருவனை எந்த அளவுக்குக் குருடாக்கிவிடும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை.
இஸ்லாத்தை எதிர்த்துப் போராடிய அபூ ஜஹ்ல், இளம் வயது தோழர்கள் இருவரிடமே வீழ்ந்தான். சத்தியத்தை எதிர்த்து நிற்பவரின் அதிகாரமும் கேலியும் எத்தனை பெரியதாயினும், அது நிலைத்து நிற்காது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.