உஹுதில் காயமுற்ற நபியை (ஸல்) கவனித்த ஃபாத்திமா (ரலி), அலீ (ரலி)

ஹதீஸ் சம்பவங்கள்

“இது குறித்து என்னை விட நன்கறிந்தவர் யாருமில்லை” என்றார்கள் ஸஹ்ல் (ரலி)

اخْتَلَفَ النَّاسُ بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، فَسَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَكَانَ مِنْ آخِرِ مَنْ بَقِيَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَقَالَ: «وَمَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَعَلِيٌّ يَأْتِي بِالْمَاءِ عَلَى تُرْسِهِ، فَأُخِذَ حَصِيرٌ فَحُرِّقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»

அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார் உஹுத் போர் நாளில் (காயமுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருதது வேறுபாடு கொண்டனர். எனவே, சஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி(ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -ஸஹ்ல்(ரலி) மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள் – அதற்கு ஸஹ்ல்(ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள். மக்களிலேயே இது குறித்து என்னை விட நன்கறிந்தவர் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை.

(உஹுத் போரில் காயமடைந்த) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்து (அவர்களின் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களே இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ(ரலி) தம் கேடயத்தில் தணஞணர் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. பிறகு (கரிக்கப்பட்ட பாயின்) சாம்பலை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது. 176

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல் – (புகாரி: 5248)

உஹுதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டபோது, சிகிச்சைக்கு மருந்தோ வைத்தியரோ இல்லை. மகள் ஃபாத்திமா (ரலி) இரத்தத்தைக் கழுவினார்கள்; அலீ (ரலி) கேடயத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள். கிடைத்த ஒரு பாயை எரித்து, அதன் சாம்பலையே காயத்தில் அழுத்தி இரத்தத்தை நிறுத்தினார்கள்.

இந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள் மறைந்துபோன பிறகு, ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தார்கள். நபிக்காக அவர்களுடைய குடும்பமும் தோழர்களும் தாங்கிய வலியை நாம் மறந்துவிடக் கூடாது; அந்த விலையின் மேல்தான் இன்று நாம் தாங்கியிருக்கும் மார்க்கம் நமக்கு எட்டியுள்ளது.