98) உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அஹ்மத்: 4982, 51115)

குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 2798)

குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அஹ்மத்: 4581, 4748)