திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்
முக்கிய குறிப்புகள்:
மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்
திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الَّذِي يَرْوِي عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ التَّفْسِيرَ هُوَ ثِقَةٌ رواه الترمذي
திருணமத்தை பகிரங்கப்படுத்துங்கள், அதை பள்ளிவாசலில் வைத்து நடத்துங்கள், அதில் தஃப் (கொட்டு) அடியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
(திர்மிதீ: 1009) ➚,(இப்னு மாஜா: 1885) ➚, இப்னுஹிப்பான்-4066, முஸ்னத் பஸ்ஸார்-2214, பைஹகீ-15082, 15093,(ஹாகிம்: 2718) ➚, தப்ரானீ-கபீர், பாகம்: 18, பக்கம்: 362, தப்ரானீ-அவ்ஸத். பாகம்: 5, பக்கம்: 222, ஸுனனுஸ் பைஹகீ-2014, பைஹகீ-15093 ஆகிய நூல்களில் ஈஸா பின் மைமூன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.
இப்னுஹிப்பான், பஸ்ஸார், பைஹகீ-15082, ஹாகிம், தப்ரானி-கபீர், அவ்ஸத், இமாம் பைஹகீயின் ஸுனனுஸ் ஸுக்ரா ஆகிய நூல்களில் அப்துல்லாஹ் பின் அஸ்வத் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
இப்னுமாஜா என்ற நூலில் காலித் பின் இல்யாஸ் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.