03) ஃபித்ராவின் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

 

  • பெருநாள் தொழுகைக்கு முன், ஃபித்ரா கட்டாயம் தரவேண்டும்.
  • நோன்பில் குறைகள், ஏழைகளுக்கு பரிகாரமாக ஃபித்ரா உள்ளது
  • வேலையாள் தவிர, குழந்தை உட்பட வீட்டில் உள்ள
    முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என தரவேண்டும்
  • ஒரு ஸாவு என்பது 4 முகத்தல் அளவை.
  • இரு கைகள் இணைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ, அதுவே ஒரு முகத்தல்.
  • அரிசி, கோதுமை என தரலாம்
  • உணவாக அல்லது பணமாக தரலாம்
  • மட்டரகமானதை தரக்கூடாது (ஹாகிம்)
  • கூட்டாக பெற்று விநியோகிப்பதே சிறந்தது.