
அல்லாஹ்வும் ரசூலும் கற்றுக்கொடுத்துள்ள அத்தியாயங்கள் மற்றும் துஆக்ககளை ஓதி உள்ளங்கையில் ஊதி, உடல்களில் தடவிக்கொள்ளும் ருக்யா எனும் நபிகளார் ஓதிப்பார்த்த முறைக்கு மார்க்கத்தில் இடமுண்டு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ […]